Headlines

‘ஜி.எஸ்.பி பிளஸ் நிபந்தனைகள் குறைப்பு’

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை இலங்கைக்கு மீண்டும் பெற்றுக்கொடுப்பதற்காக, ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்பட்டிருந்த 56 நிபந்தனைகள், 16 நிபந்தனைகளாகக் குறைக்கப்பட்டுள்ளன. ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை மீளவும் பெற்றுக்கொள்வதால், இலங்கைக்குச் சாதகமான பல நன்மைகளை எதிர்பார்க்க முடியும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். அத்துடன், இந்த வரிச்சலுகை மீளவும் கிடைக்குமா, இல்லையா என்பது தொடர்பில், இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் உறுதியாக அறிவிக்க முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். தற்போது ஆட்சியிலுள்ள நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை…

Read More

GSP வரிச்சலுகையை மீளப்பெற அரசு விண்ணப்பம்

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீளப் பெறுவதற்கு, ஐரோப்பிய ஒன்றியத்திடம் இலங்கை அரசாங்கம் நேற்று மாலை விண்ணப்பித்துள்ளதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். மனித உரிமைகள் நிலை பற்றிய கரிசனைகளால், இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை, ஐரோப்பிய ஒன்றியம் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் நிறுத்தியது. இந்தச் சலுகையை மீளப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இலங்கை அரசாங்கம், இந்தச் சலுகையைப் பெறுவதற்கு நேற்று முறைப்படி விண்ணப்பித்தது. இதுகுறித்து தகவல் வெளியிட்ட ஹர்ஷ டி சில்வா; இலங்கை…

Read More

வரிச் சுமை: நிரந்தரம் அல்ல

-வி. நிரோஷினி – ‘நாட்டு மக்களுக்கு விதிக்கப்பட்ட வரிச் சுமையானது தற்காலிகமானதே தவிர, நிரந்தரமானதில்லை. எனவே, தற்போதுள்ள வரி அதிகரிப்பு தொடர்பில், ஐரோப்பிய ஒன்றிய விசாரணைக்குழுவுடன் கலந்துரையாடி, GSP+ வரிச் சலுகையில் நல்லதொரு முடிவை எடுப்போம்’ எனப் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

Read More

ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொள்ள இலங்கை தகுதி!

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக் கொள்வதற்கான சரியான வழியில் இலங்கை பயணித்து கொண்டிருக்கிறது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைத் தூதுவர் டேவிட் டெலி தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கான ஜிஎஸ்பி பிளஸ் தொடர்பில் 58 விடயங்கள் தொடர்பில் ஐரொப்பிய ஒன்றியம் கவனம் செலுத்தியுள்ளது. இதில் மனித உரிமை விடயங்களே பிரதானமானவையாகும். ஐரோப்பிய ஒன்றியத்தை பொறுத்தவரையில் அது எந்த நாட்டுக்கும் வாழ்க்கை தர உயர்வுக்காக அழுத்தம் கொடுக்காது….

Read More

ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகைக்கான விண்ணப்பம் சமர்ப்பிப்பு

பிரசல்ஸ்ஸில் நேற்று (11) இடம்பெற்ற சந்திப்பை அடுத்து, விரைவில் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொள்ள முடியும் என்று எதிர்பார்ப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. பிரதி வெளியுறவு அமைச்சர் ஹர்ச டி சில்வா இதனை தெரிவித்துள்ளார். நேற்றைய சந்திப்பு தொடர்பாக கருத்துரைத்த ஹர்ச, இலங்கை தற்போது ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை பெற்றுக் கொள்வதற்கான இறுதி அடியை, அதாவது விண்ணப்பிக்கக்கூடிய நிலையை அடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இலங்கை – ஐரோப்பிய ஒன்றியம் செயற்குழு கூட்டம் நேற்று பிரசல்ஸ்ஸில் இடம்பெற்றது, இது விண்ணப்பத்தை…

Read More

GSP+ நிபந்தனைகளை விதித்தது ஐரோப்பிய ஒன்றியம்

ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்­ச­லு­கையை மீண் டும் பெற்றுக் கொள்­வது தொடர்பில் இலங்­கைக்கு மனித உரிமை விவ­காரம் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் தொடர்பில் 58 நிபந்­த­னை­களை ஐரோப்­பிய ஒன்­றியம் முன் ­வைத்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அந்­த­வ­கையில் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்­ச­லு­கையை மீண்டும் வழங்­கு­வது தொடர் பில் பரி­சீ­லனை செய்ய வேண்­டு­மாயின் இந்த நிபந்­த­னைகள் நிறை­வேற்­றப்­பட வேண்­டு­மென ஐரோப்­பிய ஒன்­றியம் வலி­யு­றுத்­தி­யுள்­ளதாக நம்­ப­க­ர­மாக தெரி­ய­வ­ரு­கி­றது. பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை நீக்­குதல், தடுத்து வைக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்­பான விசா­ர­ணை­களை துரி­தப்­ப­டுத்­த­துதல், புதிய மனித உரிமை…

Read More

ஜேர்மன் அதிபர் விரைவில் இலங்கைக்கு விஜயம்

ஜேர்மன் அதிபர் ஏஞ்ஜலா மெர்கல் இலங்கைக்கான விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதற்கான உத்தியோகபூர்வை அழைப்பினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜேர்மன் அதிபருடனான சந்திப்பின்போது விடுத்துள்ளார். அதேவேளை, இலங்கைக்கான ஜி.எஸ்.பி வரிச்சலுகை மற்றும் ஐரோப்பா சந்தைக்கான இலங்கைக்கான மீன் ஏற்றுமதி தடையை நீக்குவது தொடர்பிலான விவகாரங்கள் குறித்து கவனம் செலுத்துவதாக ஜேர்மன் அதிபர் கூறியுள்ளார்.

Read More

ஜனாதிபதி மைத்திரி ஜேர்மன் நோக்கி பயணம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஜேர்மனுக்கான விஜயத்தை ஆரம்பிக்க உள்ளார். ஜேர்மன் மற்றும் ஒஸ்ரியா ஆகிய நாடுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயங்களை ஜனாதிபதி மேற்கொள்ள உள்ளார். இதன் முதல் கட்டமாக ஜனாதிபதி இன்று (15) ஜேர்மனுக்கு செல்லவுள்ளார். ஜேர்மனிய அதிபர் ஏஞ்சலா மோர்கலின் அழைப்பை அடுத்தே இந்த விஜயத்தை ஜனாதிபதி மேற்கொள்ள உள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்திக்கொள்வது குறித்து இந்த விஜயத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி பிளஸ்…

Read More

ஜீ.எஸ்.பி வரிச்சலுகைத் திட்டத்திற்கு ஜேர்மன் ஆதரவு

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகைத் திட்டத்தைப் பெற்றுக்கொள்வதற்கு ஜேர்மனிய அரசாங்கத்தின் ஆதரவு எமக்கு பெரும் துணையாக அமையும் என ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடாகவியலாளர்  சந்திப்பிலே அவர்  இதனைத்  தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகைத் திட்டத்தை மீளவும் பெற்றுக்கொள்ள ஜேர்மனிய அரசாங்கம் ஆதரவளித்துள்ளது. மீளவும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகைத் திட்டத்தை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில்…

Read More

இலங்கை வரும் ஐரோப்பிய ஒன்றிய உயர்குழு!

ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்நிலை அதிகாரிகள், இலங்கை வரவுள்ளனர். எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை இவர்களின் இலங்கை விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜிஎஸ்பி பிளஸ் சலுகை உட்பட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் ஆராயும் முகமாகவே இந்த விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த குழுவினர் இலங்கையில் வர்த்தக சமூகத்தினரை மையமாகக் கொண்டு ஜீஎஸ்பி பிளஸ் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றையும் நடத்தவுள்ளனர். இதன்போது இலங்கை ஜிஎஸ்பி பிளஸ் வரிசலுகையை பெற்றுக்கொள்வதற்கான ஏதுக்கள்…

Read More