Headlines

கோத்தாவுடன் மஹிந்தவும் நீதிமன்றிற்கு வருகை!

கோத்தபாய ராஜபக்ஸவுடன் மஹிந்த ராஜபக்ஸவும் நீதிமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளார். எவன்காட் ஆயுத கப்பல் வழக்குத் தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் தற்போழுது கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற வளாகத்துக்குள் வருகைத் தந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

Read More

கோத்தபாய நீதிமன்றில் இன்று ஆஜர்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. காலி துறைமுகத்தில் அவன்கார்ட் பாதுகாப்பு நிறுவனத்திற்கு சொந்தமான மிதக்கும் ஆயுத களஞ்சிய கப்பலை இயக்கியமை தொடர்பிலேயே இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் கோத்தபாய ராஜபக்ஸ உள்ளிட்ட 8…

Read More