Headlines

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் கோத்தா

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ  இன்று காலை வாக்குமூலம் வழங்குவதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரக்னங்கா பாதுகாப்பு நிறுவனத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பிலேயே இவரிடம் விசாரணைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

கோட்டபாய குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசனை

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்சவை சந்தேக நபராக குறிப்பிடுவது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனை கோரப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீதிமன்ற உத்தரவினை மீறி, லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிற்கு எதிரில் போராட்டம் நடத்தியமை தொடர்பான சம்பவமொன்றில், கோட்டபாயவை சந்தேக நபராக குறிப்பிட முடியுமா என்பது தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனை பெற்றுக் கொள்ளப்பட உள்ளதாக பொலிஸார் நேற்று நீதிமன்றில் அறிவித்துள்ளனர். நீதிமன்ற உத்தரவினை மீறி பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் ஏற்படும் வகையில்…

Read More

கோத்தபாயவிடம் மீண்டும் வாக்குமூலம்

ரக்னா லங்கா பாதுகாப்பு சேவை தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச இன்றும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். இன்று முற்பகல் 9 மணியளவில்  ஊழல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு, கோத்தபாய சென்றார் இதேவேளை நேற்றும் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியிருந்த கோத்தபாய, வாக்குமூலம் ஒன்றை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

கோத்தபாயவிடம் இன்று விசாரணை

அவன்ட் கார்ட் மற்றும் ரக்ன லங்கா நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடிகள் குறித்த விசாரணைக்காக, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்க்ஷ இன்று (வியாழக்கிழமை) பாரிய மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் ஆயுத கொடுக்கல் வாங்கல் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் கோத்தபாய உள்ளிட்ட ஐவரை குற்றவாளிகளாக நிரூபிக்க முடியுமென அண்மையில் பிரதி சட்டமா அதிபர் தெரிவித்திருந்தார். இதனையடுத்து குறித்த மோசடிகள் தொடர்பில் பொதுமக்களிடமும் சாட்சியங்கள்…

Read More

கோத்தா கைது செய்யப்பட்டால் போராட்டம் வெடிக்கும்!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கைது செய்யப்பட்டால் போராட்டம் வெடிக்கும் என பெவிதி ஹன்ட என்னும் சிங்கள பௌத்த அமைப்பு அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த அமைப்பைச் சேர்ந்த முரத்தட்வே ஆனந்த தேரர், இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவன்ட் கார்ட் சம்பவத்தின் அடிப்படையில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்ய ஆளும் கட்சியின் சில அமைச்சர்கள் முயற்சிக்கின்றனர். இவர்களின் தேவைக்கு அமைய ஊழல் மோசடி விசாரணைப் பிரிவினர் கோத்தபாய…

Read More

கோத்தபாய பாரிய நிதி மோசடிகள் விசாரணை ஆணைக்குழுவில் பிரசன்னம்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச பாரிய நிதி மோசடிகள் விசாரணை குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரசன்னமாகியுள்ளார். சற்று முன்னர் அவர் இவ்வாறு ஆணைக்குழுவின் காரியாலயத்திற்கு சென்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் ரக்னா லங்கா மற்றும் அவன்ட் கார்ட் நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் கோத்தபாயவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவங்கள் தொடர்பில் இன்றும் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Read More

அனுர குமார கூறு­கின்றார் என்­ப­தற்­காக பத­வி விலக முடி­யாது

மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனுர குமார திசா­நா­யக்க கூறு­கின்றார் என்­ப­தற்­காக நாங்கள் அமைச்சுப் பத­வி­க­ளி­லி­ருந்து விலக முடி­யாது. நான் அமைச்­ச­ராக இருக்­க­வேண்­டுமா இல்­லையா என்­ப­தனை ஜனா­தி­ப­தியும் பிர­த­ம­ருமே தீர்­மா­னிக்­க­வேண்டும் என்று நீதி­ய­மைச்சர் விஜய­தாச ராஜ­பக் ஷ தெரி­வித்தார். மக்கள் விடு­தலை முன்­னணி கூறு­வதைப் போன்று முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவை எமது அர­சாங்கம் கைது­செய்­தி­ருந்தால் அவர்கள் மகிழ்ச்­சி­ய­டைந்­தி­ருப்­பார்கள். ஆனால், சட்­டத்­துக்கு முர­ணாக நாங்கள் எத­னையும் செய்ய முடி­யாது என்றும் அவர் குறிப்­பிட்டார். எவன்ட் கார்ட்…

Read More

கோத்தாவை கைது செய்ய முடியாது

ஐக்­கிய நாடுகள் சபையின் கலப்பு விசா­ர­ணையையும் சர்­வ­தேச நீதி­ப­தி­களையும் எதிர்ப்­ப தாக கூறிக் கொள்ளும் தேசப்­பற்­றாளர்கள் இலங்­கையில் நீதித்­துறைமீது நம்­பிக்­கை­யில்லை என்­கி­றார்கள். இதுவா இவர்­க­ளது தேசப்­பற்று என்று நீதி­ய­மைச்சர் விஜேய­தாஸ ராஜ­பக்ஷ நேற்று சபையில் கேள்வி எழுப்பினார். “எவன்கார்ட்” விவ­கா­ரத்தைப் பயன்­ப­டுத்தி கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவை கைதுசெய்ய முடி­யாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற எவன்கார்ட் தொடர்­பான சபை ஒத்­திவைப்பு வேளை பிரே­ரணை மீதான விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே நீதி­ய­மைச்சர் விஜேய­தாஸ ராஜ­பக்…

Read More

வெள்ளைவான் கடத்தல்களுடன் தொடர்பு கிடையாது :கோத்தபாய

வெள்ளைவான் கடத்தல்களுடன் தொடர்பு கிடையாது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தம்மீது சுமத்தியுள்ள கடத்தல் மற்றும் ஏனைய குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் எஸ்.புலித்தேவனுடன் தாம் எவ்வித தொடர்புகளையும் பேணவில்லை என அவர் தெரிவித்துள்ளார். தமக்கு எதிராக குற்றம் சுமத்துபவர்கள் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Read More