Headlines

முதலீட்டாளர்களின் சொர்க்கபுரியாக மாறியுள்ள இலங்கை : மங்கள சமரவீர

சுற்றுலாப் பயணிகளுக்கு மாத்திரம் சொர்க்கபுரியாக இருந்து வந்த இலங்கை தற்போது முதலீட்டாளர்களின் சொர்க்கபுரியாக மாறியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஜீ.7 நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஜப்பான் சென்றுள்ள அமைச்சர் மங்கள சமரவீர அங்கு இதனை கூறியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கை காரணமாக மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தந்துள்ள உலக நாடுகளின் தலைவர்களிடம் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால…

Read More

ஜி-7 நாடுகளின் தலைவர்களை சந்திக்கும் மைத்திரி!

ஜப்பானின் நகோயா நகரில் நடைபெறும் ஜி-7 நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாட்டில் , இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர்மட்டப் பேச்சுக்களை நடத்தவுள்ளார். இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன், ஜேர்மனி ஜனாதிபதி ஏஞ்சலா மார்க்கல், பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கோயிஸ் ஹொலன்டே, கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ரூடே, இத்தாலியப் பிரதமர் மற்ரோ ரென்சி, ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். குறித்த நிகழ்வு, “ஆசியாவின் உறுதிப்பாடும் செழிப்பும்” என்ற தலைப்பில் இன்று காலை இடம்பெறவுள்ளது….

Read More

ஜப்பானில் இன்று தொடங்குகிறது ஜி-7 மாநாடு

ஜி-7 அமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளன. இந்த ஆண்டு ஜி-7 மாநாடு ஜப்பானில் நடைபெறுகிறது. இன்று நடைபெறும் இந்த மாநாட்டில் உறுப்பு நாடுகளின் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த மாநாட்டில் இரண்டு நாட்கள் நடைபெறும் இலங்கை அதிபர் மத்ரி பால சிறிசேனா சிறப்பு அழைப்பாளராக ஜப்பான் அரசால் அழைக்கப்பட்டுள்ளார். தென் மேற்கு டோக்கியோவில் உள்ள ஷிமாவில் இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில்…

Read More

G7 மாநாடு: இலங்கை ஜனாதிபதிக்கு முதன்முறையாக அழைப்பு

G7 மாநாட்டில் பங்கேற்பதற்கு இலங்கை ஜனாதிபதி ஒருவருக்கு முதன்முறையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜேர்மனியில் எதிர்வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்கவுள்ளதாக பிரதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (17) கொழும்பு அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே G7 மாநாட்டில் பங்கேற்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் சஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

Read More