Headlines

137 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு!

பாதுகாப்பற்ற முறையில் உணவு வகைகளை விற்பனை செய்து வந்த 137 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார சங்கத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார். தேசிய உணவு பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள 3212 வர்த்தக நிறுவனங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட திடீர் தேடுதல் நடவடிக்கையிலேயே இந்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும்   குறிப்பிட்டார். இது தொடர்பில்  அவர் மேலும் குறிப்பிடுகையில் தேசிய பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு நாடளாவிய…

Read More

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்த நால்வர் கைது

காலாவதியான மற்றும் பாவனைக்குதவாத உணவுப்பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர்கள் நால்வர் மட்டக்களப்பு-காத்தான்குடி பிரதேசத்தில் நேற்று (22) கைது செய்யப்பட்டுள்ளனர். காத்தான்குடி பொது சுகாதார பரிசோதனை அதிகாரிகள் மற்றும் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்களை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். பாவனைக்குதவாத இனிப்பு வகைகள், போத்தல்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் என்பவையே காலாவதியான நிலையில் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் இன்றைய தினம் மட்டகளப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

நஞ்சு மரக்கறிகளை உண்ணக் கொடுக்கின்றார்கள்

– ஜவ்பர்கான் – எந்தவொரு பெற்றாரும் தமது பிள்ளைகளுக்கு நஞ்சூட்ட விரும்பமாட்டார்கள். ஆனால் மறைமுகமாக பெற்றோர்கள் நஞ்சுகலந்த, இராசாயன பசளையுடன் தயாரிக்கப்பட்ட நஞ்சு மரக்கறிகளை உண்ணக் கொடுக்கின்றார்கள். இதனால் பலர் நோய்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது என விவசாய திணைக்களத்தின் மட்டக்களப்பு உதவிப்பணிப்பாளர் வி.பேரின்பராசா தெரிவித்தார். காத்தான்குடி விவசாய போதனாசிரியர் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில் நடைபெற்ற நகர்ப்புற வீட்டுத்தோட்ட வயல் விழாவில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். காத்தான்குடி விவசாய போதனாசிரியை குந்தகை ரவிசங்கரின்…

Read More