Headlines

அலங்கார மீன் ஏற்றுமதி மூலம் 240 கோடி ரூபா வருமானம்

மீன்பிடி அமைச்சு அலங்கார மீன் ஏற்றுமதி வருமானத்தை மேம்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளது. இதற்கு அமைய மீன் குஞ்சு உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுவோரின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும். றுகுணு பல்கலைக்கழகத்தின் மீன் உயிரியல் பிரிவின் ஆதரவும் பெற்றுக் கொள்ளப்படும். மாத்தறை பொல்ஹேன, மடிக, ஹிக்கடுவ, உணவட்டுண ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட பரீட்சார்த்த நடவடிக்கைகள் வெற்றியளித்துள்ளன. அலங்கார மீன்களை ஏற்றுமதி செய்யும் நாடுகள் மத்தியில் இலங்கை ஆறாவது இடத்தில் உள்ளது. கடந்த வருடம் அலங்கார மீன் ஏற்றுமதி மூலம் 240…

Read More

08 அண்டுகள் பழமையான 03 தொன் மீன்கள் கண்டுபடிப்பு; விசாரிக்க உத்தரவு

இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் குளிர்பதன சேமிப்பு கிடங்கில் இருந்து சுமார் எட்டு ஆண்டுகள் பழமையான 03 தொன் மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டமை சம்பந்தமாக உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார். மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் பதில் தலைவராக கடமையாற்றும் கடற்றொழில் அமைச்சின் மேலதிக செயலாளர் எஸ் பாலசுகமுனியமுக்கு அமைச்சர் இது தொடர்பில் ஆலோசனை வழங்கியுள்ளார். வௌிநாடொன்றில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட இந்த மீன்கள், விநியோகம் செய்யப்படாமையினால் கூட்டுத்தாபனத்திற்கு பாரியளவில் நட்டம்…

Read More

மீன் ஏற்றுமதியில் இலங்கை முன்னேற்றம்

மீன் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 11 ஆம் இடத்திலிருந்து ஏழு இடங்கள் முன்னேறி 4 ஆவது இடத்தை பிடித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார். ஐரோப்பிய நாடுகளுக்கான மீன் ஏற்றுமதி தடை நீக்கப்பட்ட இரண்டு மாதங்களில் குறித்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்நிலையில் அலங்கார மீன் ஏற்றுமதியின் மூலம் கடந்த வருடத்தில் மாத்திரம் 2400 மில்லியன் ரூபா அரசுக்கு  வருமானம்…

Read More

மாத்தறையில் நீர் இன்றி ஒரு மணித்தியாலம் வாழும் மீன்

நீர் இன்றி ஒரு மணித்தியாலம் வாழும் அதிசய மீன் ஒன்று பற்றிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மாத்தறை தெய்யந்தர வெல்பாமுல பிரதேசத்தில் இந்த அதிசய மீன் காணப்படுகின்றது. வெல்பாமுல பிரதேசத்தைச் சேர்ந்த எச்.என். ஜோசப் என்பவரின் வீட்டுக்கு எதிரில் உள்ள சிறிய நீர்நிலையில் வாழும் மீன் ஒன்று ஒரு மணித்தியாலம் வரையில் நீர் இன்றி வாழும் எனத் தெரிவிக்கப்படுகிறது. வீட்டு உரிமையாளர் ஜோசப், “திப்பிலி திப்பிலி” என அழைக்கும் போது அவரது கைகளுக்கு வரும் இந்த மீன் சுமார்…

Read More

ஐரோப்பாவில் இலங்கை மீன்களுக்கு கிராக்கி – திணறுகிறது இலங்கை

ஐரோப்பிய ஒன்றியத்துக்கான மீன் ஏற்றுமதித் தடை அண்மையில் நீக்கப்பட்ட நிலையில், ஐரோப்பிய நாடுகளின் மீன் தேவைக்கு ஏற்றளவுக்கு, மீன்களை விநியோகிக்க முடியாத நிலையில் இருப்பதாக சிறிலங்கா தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் 1000 மெட்ரிக் தொன் மீன்களை கோரியுள்ளன. ஆனால் உள்ளூரில் மீன்களின் கையிருப்பு குறைவாக இருப்பதால், இந்த தேவையை நிறைவு செய்ய முடியாதிருப்பதாக, சிறிலங்காவின் கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை நீக்கப்பட்ட பின்னர், 200 மெட்ரிக் தொன் மீன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன….

Read More

மீன் ஏற்றுமதி தடை நீக்கம்

இலங்கை மீன் வகைகள் ஏற்றுமதி செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. இலங்கை மீன் வகைகள் ஏற்றுமதி தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் நியமிக்கப்பட்ட குழுவினரால் இறுதித் தீர்மானம் இன்று எடுக்கப்படும் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மஹிந்த அமரவீர குறித்த தடை நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

Read More

டின் மீன்களுக்கு இறக்குமதி வரி அதிகரிப்பு

தகரத்தில் அடைக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ டின் மீனுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். முன்னதாக 50 ரூபாவாக இருந்த இந்த வரியை தற்போது 100 ரூபா வரை அதிகரிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More

மீன் ஏற்றுமதி தடை நீங்கும் சாத்தியம்?

இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டக் குழுவினர் இன்று கடற்றொழில் அமைச்சரை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கையின் மீன் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதற்கு முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா என்பது தொடர்பில் ஆராய இந்த இலங்கை வந்துள்ளது. ஐரோப்பாவின் இந்தக் குழு கடந்த 12ஆம் திகதி கொழும்பு வந்தது. நால்வரடங்கிய இந்தக் குழுவில் இரண்டு தொழில்நுட்ப அதிகாரிகளும் உள்ளடங்குகின்றனர். உலகெங்கும் சட்டவிரோதமான வகையில் மீன்பிடித்தொழிலை எதிர்த்துப் போராடும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இலங்கையிலிருந்து…

Read More