Headlines

கல்வி அமைச்சின் செயலாளர் நியமனம்

கல்வி அமைச்சின் புதிய  செயலாளராக எஸ்.எஸ். ஹெட்டியாராச்சி தனது கடமைகளை இன்று (01) கல்வி அமைச்சின் தலைமைக்காரியாலயத்தில்  பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். இவர் இதற்கு முன்னர் இலங்கை நிர்வாக சேவையின் உறுப்பினராகவும், ஓய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றியுள்ளதுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மேலதிக செயலாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.

Read More

சிறந்த பாடசாலை தேசிய நிகழ்ச்சித் திட்டத்துக்காக அதிக நிதி!

“கிட்டிய பாடசாலை சிறந்த பாடசாலை” எனும் செயற்திட்டத்தின் கீழ் 7000 பாடசாலைகளைப் புனரமைக்கும் பாரிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக 6000 கோடி ரூபா செலவிடப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது. இச் செயற்திட்டங்களுக்காக ஒவ்வொரு மாகாணங்களுக்கும் 50 மில்லியன் ரூபா முதல் 400 மில்லியன் ரூபா வரை நிதியொதுக்கப்பட்டுள்ளது. ஆயினும் இச் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் மேலும் பணவசதிகள் தேவைப்பட்டால் அதிகளவிலான நிதியை ஒதுக்கத் தயாராகவுள்ளதாகவும் கல்வியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. அறிவு, ஆக்கத்திறன், மற்றும் மனிதநேயமுள்ள சிறுவர்களை உருவாக்கும்…

Read More