Headlines

உடுவே தம்மாலோக்கதேரரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பணிப்பு

உடுவே தம்மாலோக்கதேரரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர், குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். சட்டவிரோதமான முறையில் யானைக் குட்டியொன்றை தம்வசம் வைத்திருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தம்மாலோக்க தேரரை கைது செய்வதற்கு முன்னதாக அவரிடம் வாக்கு மூலமொன்றை பெற்றுக்கொள்ளுமாறு சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார். உடுவே தம்மாலோக்க தேரரை கைது செய்வதற்கான போதியளவு ஆதாரங்கள் காணப்படுவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read More

காட்டு யானை அச்சுறுத்தலை நிறுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்

– பி.எம்.எம்.ஏ.காதர் – கிழக்கில் காட்டு யானை அச்சுறுத்தலை நிறுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் மட்டு,அம்பாறை மாவட்டங்களில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து காணப்படுகிறது காட்டு யானைகளின் தாக்கத்தினால் பலர் உயிர் இழந்துள்ளனர் இது விடயத்தில் அவசரமாக நடவடிக்கை எடுத்து காட்டு யானைகளின் அச்சுறுத்தலில் இருந்து கிழக்கு மாகாண மக்களை காப்பாற்ற ஆவன செய்ய வேண்டும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் வனவளத்துறை அமைச்சர் யவிக்ரம பெரேராவிடம் எழுத்து மூலமான…

Read More