Headlines

காட்டு யானை தாக்கியதில் சிறுமி பலி

ஏ.எச்.ஏ. ஹுஸைன் மட்டக்களப்பு சித்தாண்டி சந்தனமடு ஆற்றுப்பகுதியில், சனிக்கிழமை (03) மாலை, காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகி சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். மாவடிவெம்பு 1ஐச் சேர்ந்த ரவீந்திரன் ஷர்மிலா (வயது 11), அவரது தங்கை ரவீந்திரன் துர்ஷிகா (வயது 9) மற்றும் அவர்களது மாமா ஆகியோர், ஈரக்குளம் கிராமத்துக்கு  சைக்கிளில் சென்றுவிட்டு, சந்தனமடு ஆற்றுப்பகுதிக்கு அருகே உள்ள வயல்பாதையூடாக மாவடிவெம்பு கிராமத்தை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்துள்ளனர். இதன்போது, குறித்த பாதைக்கு குறுக்கான வந்த காட்டுயானை, இவர்களை…

Read More

தகவல் வழங்கினால் ஒரு இலட்சம்

பொலன்னறுவை – மட்டக்களப்பு பகுதியில் புகையிரத வீதி மஹேவேவ பகுதியில் யானை ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த யானையில் காது மற்றும் வாளை சந்தேக நபர் ஒருவர் வெட்டிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை துரிதமாக தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். இதனடிப்படையில் கடந்த 27ஆம் திகதி குறித்த யானை விபத்துக்குள்ளான நிலையிலேயே இவ்வாறு யானையில் உடற்பாகங்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகளை முன்னெடுத்துள்ள வனவிலங்கு திணைக்களம்…

Read More

யானை தாக்கி இருவர் பலி

அனுராதபுரம்  தெப்பன்குளம் பகுதியில் இன்று (15) அதிகாலை காட்டு யானை தாக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த பகுதி விவசாயிகள் இரண்டு பேரே காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் குறித்த சம்பவத்தில் 55 வயது மற்றும் 52 வயதானவர்களே  உயிரிழந்துள்ளனர்.

Read More

போலி அனுமதிப்பத்திரங்களுடன் வளர்க்கப்பட்ட யானைகள் மீட்பு

போலி அனுமதிப்பத்திரங்களுடன் வளர்க்கப்பட்ட 39 யானைகளை இதுவரை வன ஜீவராசிகள் திணைக்களம் பொறுப்பேற்றுள்ளது. ருவன்வெல்ல – அம்திரிகல பிரதேச வீடொன்றிலிருந்து யானை குட்டி ஒன்றை நேற்றிரவு மீட்டதாக வன ஜீவராசிகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மீட்கப்பட்ட யானைக் குட்டியை உடவலவை யானைகள் சரணாலயத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், போலி ஆவணங்களுடன் வளர்க்கப்பட்டு வரும் மேலும் 6 யானைகளை மீட்தற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. சட்டவிரோதமாக பராமறிக்கப்பட்டு வரும் யானைகளை மீட்பதற்கு குற்றப்புலனாய்வு பிரிவினரும்,…

Read More

அமைச்சர் றிஷாத்  – அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவுக்கு கடிதம்

– முனவ்வர் காதர் – வடக்கில் மீள்குடியேறிவரும் மக்களை, யாணைகளின் அச்சத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் மின்சார வேலிகளை அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறு வனஜீவராசிகள் மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பான அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான றிஷாத் பதியுதீன் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மன்னார் மாவட்டத்தில் நானாட்டான், மாந்தை மேற்கு, முசலி பிரதேசங்களில் பல பகுதிகள் யாணைகளின் அச்சுறுத்தலுக்கு மக்கள் உள்ளாக வேண்டிய சூழல்…

Read More

மட்டுவில் தொடரும் யானைகளின் அட்டகாசம்!

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட திக்கோடைக் கிராமத்தில் நேற்று அதிகாலையில் காட்டுயானை புகுந்து கைவரிசையினை மீண்டும் காட்டியுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருதாவது, நேற்று (16) அதிகாலையில் திக்கோடை பாடசாலைக்கு முன்பாக உள்ள தங்கத்துரை திருக்கணேசன் என்பவரது அரிசி ஆலையினை உடைத்து சேதப்படுத்தியுள்ளது. யானைகளின் தாக்குதல்கள் இப்பிரதேசத்தில் அப்பிரதேசத்தில் நாளாந்தம் தொடர்ந்த வண்ணமே உள்ளது. இதனை அதிகாரிகள் கவனமெடுத்து மக்களின் அச்சமின்றிய வாழ்க்கையினை தருமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read More

யானை தாக்கி இளைஞன் பலி

திருக்கோவில் – ஸ்ரீவள்ளிபுரம் பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் 22 வயதுடைய இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார். இன்று காலை விறகு வெட்டுவதற்காக காட்டுக்கு சென்ற போதே இவரை யானை தாக்கியுள்ளது. பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More