Headlines

மின்சார கட்டணம் 300 ரூபாவாக குறைப்பு

விவசாய நடவடிக்கைகளுக்கான  செலுத்த வேண்டிய மின்சார கட்டணம் இன்று முதல் 300 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் விவசாய நடவடிக்கைகளுக்கான மின்சார கட்டணம் 600 ரூபாவாக அறவிடப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று முதல் விவசாய நடவடிக்கைகளுக்கான மின்சார கட்டணமாக 300 ரூபா அறவிடப்படவுள்ளது. இதேவேளை விவசாய நடவடிக்கைகளுக்காக புதிய மின் மீட்டர் பொருத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

வரட்சியால் நாட்டில் மின்சாரம் தடைப்படாது

நாட்டின் நீர் மின் நிலையங்களை அண்டிய நீர் நிலைகளில் நீர் மட்டம் பாரியளவில் குறைவடைந்துள்ளது. எனினும் மின்சாரத் தடை ஏற்படக்கூடிய சாத்தியம் தற்போதைக்கு இல்லை எனவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மேலும், எதிர்வரும் வாரங்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வரட்சியான காலநிலை நிலவினால் இதனை எதிர்நோக்கத் தயார் எனவும் குறிப்பிட்டுள்ளது. நீர் மின் நிலையங்களில் 100 வீத உற்பத்தி காணப்படும் போது செயற்படுத்தாது விடும் டீசல் மின் உற்பத்தி நிலையங்களை செயற்படுத்துவதன் மூலம் ஒட்டுமொத்த…

Read More

4000 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

மின்சார சபையுடன் இணைந்த மற்றும் மனித வலு குத்தகை அடிப்படையில் சேவையாற்றிய சுமார் 4 ஆயிரம் ஊழியர்கள் செம்டெம்பர் 4ஆம் திகதி முதல் நிரந்தர சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். 2014ஆம் ஆண்டு நிறைவடைவதற்கு முன்னர் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட, நீண்ட காலம் சேவையில் இருந்து, மின்மானி வாசிப்பு மற்றும் ஆட்பல வேலைகளில் ஈடுபட்ட சகல ஊழியர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது. செப்டெம்பர் 4ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில்…

Read More

அவசரகால மின்சார முகாமை ஆராய குழு நியமனம்

இலங்கையில் அவசர நிலைமைகளின் போது மின்சாரத்தை முகாமைத்துவம் செய்வது தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நிபுணர்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் குழுவினால் அவசர நிலைமைகளின் போது தடையின்றி மக்களுக்கு மின்சாரத்தை வழங்குவதற்கு தேவையான பரிந்துரைகள் முன்வைக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்த்தன கூறினார். அத்துடன் குறித்த அறிக்கையை இந்த மாத நிறைவிற்குள் வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அண்மையில் நாட்டில் ஏற்பட்ட வௌ்ளம், மண்சரிவு மற்றும் சாலாவ இராணுவ முகாம் வெடிப்புச் சம்பவத்தின் போது…

Read More