Headlines

துமிந்த சில்வா சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி

பாரத லக்ஷ்மன் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திடீரென ஏற்பட்ட காய்ச்சல் காரணமாகவே அவர் இவ்வாறு சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கடந்த 28ஆம் திகதி திடீரென ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக துமிந்த சில்வா சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலை ஊடக பேச்சாளர் துஷார உபுல்தெய மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

தலையில் துப்பாக்கிச் சூடு பட்டது கூட தெரியாது – துமிந்த சில்வா

எனது தலையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பதே வேறு நபர்கள் சொல்லித்தான் எனக்குத் தெரியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தெரிவித்துள்ளார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட நான்கு பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் மேல் நீதிமன்றம் துமிந்த சில்வா உள்ளிட்ட ஐந்து பேருக்கு மரண தண்டனை விதித்திருந்தது. நேற்றைய வழக்கு தீர்ப்பின் போது நீதிபதிகளிடம் துமிந்த இதனைத் தெரிவித்திருந்தார். எனக்கு எதுவும் தெரியாது. எனது…

Read More