Headlines

சென்னையில் மீண்டும் கச்சேரியை தொடங்கிய மழை

சென்னையில் நேற்று பின்னிரவில் இருந்து லேசாக வெளுக்கத் தொடங்கிய வானம், இன்று பிற்பகலில் இருந்து மேகப்போர்வையை போர்த்திக் கொண்டது. சுமார் ஒருவாரத்துக்குப் பிறகு பல இடங்களில் வெள்ளநீர் வடிந்து வருவதையும், பஸ், ரெயில் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து ஆங்காங்கே இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருப்பதையும் கண்டு மகிழ்ச்சியடைந்த மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக இன்று பிற்பகல் 3 மணியளவில் சென்னையில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. குறிப்பாக, எழும்பூர், மைலாப்பூர், தேனாம்பேட்டை, விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அடர்த்தியான…

Read More

ஓய்ந்தது பேய் மழை: வழமைக்கு திரும்புகின்றது சென்னை

சில நாட்களாக தொடர்ந்து பெய்யும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் தண்ணீரில் தத்தளித்து வந்த சென்னையில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருவதுடன் பல பகுதிகளில் வெள்ளநீர் வடிந்து வருகிறது.  செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாலும், மழை ஓய்ந்துள்ளதாலும் பல இடங்களில் வெள்ளநீர் வடிந்து வருகிறது. அடையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் கடந்த 2 நாட்களாக சைதாப்பேட்டை பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்ளதால், அடையாற்றில்…

Read More

தமிழகத்தில் வெள்ள பாதிப்பால் 15 ஆயிரம் கோடி ரூபாய் நிதி இழப்பு

சென்னை மற்றும் தமிழகத்தில் பெய்யும் கனமழையால் ரூ.15ஆயிரம் கோடி அளவுக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அசோசெம் கூறியுள்ளது. இந்திய தொழில் மற்றும் வர்த்தக ஒருங்கிணைந்த கூட்டமைப்பு (அசோசெம்) அறிக்கையில், சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. சென்னை நகரம் ஸ்தம்பித்துக் கிடக்கிறது. இந்த சூழ்நிலை வர்த்தகம், தொழிற்சாலைகள் மற்றும் பல வணிக நடவடிக்கைகளுக்கு அச்சத்தையும், ஸ்திரமற்றதன்மையையும் உருவாக்கியுள்ளது. சாதாரண குடிமகனும் சொத்துகள் சேதமடைவதன் மூலம் இழப்பை…

Read More

சென்னைக்கான எயார் லைன்ஸ் விமான சேவை ரத்து

சென்னையில் தொடரும் கடும் மழை காணரமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வீதி, ரயில் போக்குவரத்து மற்றும் விமானம் போக்குவரத்தும் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. வரலாறு காணாத மழை பெய்துள்ளதால்,விமான நிலையத்திற்குள் தண்ணீர் புகுந்தது. விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னைக்கான இலங்கையின் ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ்  விமான சேவை தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளது. மேலும் விமானத்தின் ஓடுபாதையில் மழை நீர் தேங்கியிருப்பதாலும், பெய்து வரும் மழை காரணமாக ஓடுபாதை தெளிவாகத் தெரியாத நிலை இருப்பதாலுமே சென்னையிலிருந்து புறப்படும் அனைத்து உள்நாட்டு…

Read More