Headlines

யோசிதவுக்கு பிணை!

கல்கிஸ்ஸை, மிஹிந்து மாவத்தையில் காணி ஒன்றின் உரிமை தொடர்பான வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் யோசித ராஜபக்க்ஷவுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. தெஹிவளையில் கட்டப்பட்ட அதி சொகுசு மாளிகை குறித்த வழக்கு இன்று (16) கல்கிசை நீதவான் முன்னிலையில் எடுத்து கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது, தலா ஒரு மில்லியன் பெறுமதியான 3 சரீரப்பிணைகளில் விடுதலை செய்யுமாறு கல்கிசை நீதவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

முன்னாள் மேலதிக நீதவானுக்கான பிணை இடைநிறுத்தம்

கொழும்பு மேலதிக நீதமன்றத்தின் முன்னாள் மேலதிக நீதவான்  திலின கமகேவுக்கு, கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தினால்  வழங்கப்பட்டுள்ள பிணையை, கொழும்பு மேல் நீதிமன்றம் இடைநிறுத்தி உத்தரவிட்டுள்ளது. அவருக்கு வழக்கப்பட்ட விளக்கமறியலை இல்லாதொழிக்க கூடாது என்று சட்டமா அதிபர், திருத்திய விண்ணப்பமொன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த விண்ணப்பத்தை பரிசீலனைக்கு உட்படுத்திய போதே, மேல் நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளது.

Read More

கராத்தே வீரர் வசந்த செய்சா கொலையின் 27 சந்தேகநபர்களும் பிணையில் விடுதலை

கராத்தே வீரர் வசந்த செய்சாவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 27 சந்தேகநபர்களையும் கடும் நிபந்தனையுடன் பிணையில் விடுதலை செய்ய வடமத்திய மாகாண உயர் நீதிமன்ற நீதவான் மஞ்சுலா திலகரத்ன உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்து கொண்ட போது, பிரதான சந்தேகநபரை தவிர ஏனையவர்களை பிணையில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். சந்தேகநபர்கள் ஒவ்வொருவரும் தலா 10,000 ரொக்க பிணையிலும், ரூபா 5 இலட்சம் சரீரப் பிணையிலும் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி…

Read More

முன்னாள் நீதவான் திலின கமகே பிணையில் விடுதலை

முன்னாள் கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே கங்கோடவில நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். சட்டவிரோதமான முறையில் யானை குட்டி ஒன்றை வைத்திருந்தார் என இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு சரணடைந்துள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுக்களின் காரணமாக திலின கமகே கட்டாய விடுப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னிணைப்பு இன்று கங்கோடவில நீதிமன்றத்தில் சரணடைந்த முன்னாள் கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே பினனயில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Read More

எம்பிலிபிட்டிய ஏ.எஸ்.பி.க்கு பிணை

எம்பிலிபிட்டியவில் சுமித் பிரசன்ன ஜயவர்தன என்ற குடும்பஸ்தரின் மரணத்துக்கு காரணமானவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் சமிந்த தர்மரத்ன இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 20 ஆயிரம் ரூபாய் காசுப்பிணையிலும் 5 இலட்சம் ரூபாய் சரீர பிணையிலும்  அவரை விடுவிக்குமாறும் எம்பிலிபிட்டிய உயர் நீதிமன்ற நீதிபதி குமாரி எம்.அபேரத்ன உத்தரவிட்டுள்ளார். மேலும், குறித்த பொலிஸ் அத்தியட்சகரின் கடவுச்சீட்டை நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் பணித்துள்ளார்.

Read More

எக்னெலிகொட விவகாரம் – சந்தேகநபர் பிணையில் விடுவிப்பு

ஊடகவியாலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரண்டாவது சந்தேக நபரான லெப்டினட் கேர்ணல் சுபோத சிறிவர்தனவை பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபரை 20 இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா 60 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணைகளிலும் விடுதலை செய்யுமாறு ஹோமாகம நீதவான் ரங்க திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து பிரதி ஞாயிறு தோறும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராக வேண்டும் என…

Read More

துறைமுக முன்னாள் தலைவருக்கு பிணை!

துறைமுகத்தின் முன்னாள் தலைவரான பிரியத் பந்து விக்கிரம இன்று (27) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த தலைவருக்கும்,மேலும் இருவருக்கும் எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவினரால் வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஞானசார தேரருக்கு பிணை வழங்க மறுப்பு

பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஹோமாகம நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (28) காலை ஞானசார தேரரை பிணையில் விடுதலை செய்யுமாறு கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட ஹோமாகம நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரங்க திஸாநாயக்க பிணை மனுவை நிராகரித்தள்ளார். காணாமல் போனதாக கூறப்படும் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியை, ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் வைத்து திட்டிய குற்றஞ்சாட்டின் அடிப்படையில் ஞானசார…

Read More