Headlines

21 பாடசாலைகள் அமைந்துள்ள இடங்கள் மண்சரிவு அபாயம்

பதுளை மாவட்டத்தின் 21 பாடசாலைகள் அமைந்துள்ள இடங்கள் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ள இடங்களாக மண்சரிதவியல் தேசியகட்டிடவியல் ஆய்வகம் பிரகடனப்படுத்தியுள்ளது.

Read More

2016 ஜனவரிக்குள் வீடுகள் அமைத்துக் கொடுக்க உறுதி

கொஸ்லாந்தை மீரியாபெத்த மண்சரிவினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் 2016 ஜனவரி இறுதிக்குள் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா இதனை தெரிவித்துள்ளார். நேற்று மாலை அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இதனைக் குறிப்பிட்டார். மீரியாபெத்த மண்சரிவு ஏற்பட்டு ஒரு வருட காலமாகியும், வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படாமைக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.மீண்டும் ஒரு அனர்த்தம் ஏற்படாதவண்ணம் நிலத்தை செப்பனிடுதல், மூலப்பொருட்களின் விநியோகம், போன்ற பல காரணிகள் இதற்கு…

Read More

“வீடுகளை உடனடியாக கட்டித் தா” : மீரியபெத்தை மக்கள் ஆர்ப்பாட்டம்

பதுளை மீரியபெத்தை மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக வீடுகளை கட்டித்தர வேண்டும் என கோரி இன்று பண்டாரவளையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மண்சரிவு இடம்பெற்று ஒருவருடம் முடிவடைந்துள்ள போதும் பாதிக்கப்பட்ட மக்கள் பூனாகலையில் உள்ள 200 வருட பழமையான தொழிற்சாலை ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமக்கு மூன்று மாதத்தில் வீடுகள் கட்டித் தருவதாக அரசியல் வாதிகள் வாக்களித்த போதும் ஒரு வருடம் நிறைவடைந்து வீடுகள் கட்டித் தரவில்லை. மக்கள்தெனிய என்ற இடத்தில் புதிதாக வீடுகள் கட்டப்படுகின்ற போதும்…

Read More