Headlines

சேதமடைந்த சான்றிதழ்களை விரைவில் மீளப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சேதமடைந்த பரீட்சை சான்றிதழ் பத்திரங்களை விரைவில் மீண்டும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு, பரீட்சைகள் ஆணையாளருக்கு கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் பணிப்புரை விடுத்துள்ளார். தமது பிரதேசத்தின் கிராம சேவர்கள் மூலம் இதற்கான நடவடிக்கைகளை பாதிக்கப்பட்டவர்கள் மேற்கொள்ளலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read More

இலவசச் சீருடைத் திட்டத்தில் மாற்றம்

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படக்கூடிய சீருடைக்குப் பதிலாக 2016ம் ஆண்டு முதல் கூப்பன் வழங்குவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. நேற்று பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சின் செயலாளர் டபிள்யுபி. எம். பந்துசேன தெரிவித்தார். எனினும் அவற்றை எவ்வாறு வழங்குவது என்பது தொடர்பான மேலதிக செயற்பாடுகள் பற்றி இறுதி முடிவு எட்டப்படவில்லை என்று அவர் தெரிவித்தார். கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமின் ஆலோசனைக்கமைய இந்த புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார். இதனூடாக…

Read More