அப்பம் சாப்பிட்டுவிட்டு வரலாற்று தீர்மானம் எடுத்தேன்
இந்த நாள் எனக்கு மறக்க முடியாத நினைவு நாள். கடந்த ஆண்டு இதேதினத்தில் அரசை விட்டு வெளியேறி ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் செய்தியை வெளியிட்டேன். அதற்கு முதல் நாள் முன்னாள் ஜனாதிபதியுடன் ஒன்றாக இணைந்து அப் பம் சாப்பிட்டு விட்டு வரலாற்றுத் தீர்மான த்தை எடுத்தேன் என நவம்பர் மாதம் 21 ஆம் திகதியை நினைவு கூர்ந்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எனக்கு சிறப்பான பின்புலம் கிடையாது. பிரபுத்துவ குடும்பத்தை சேர்ந்தவன் அல்ல. சாதாரண விவசாய குடும்பத்தைச் சேர்ந்த…
