Headlines

எமது சேவைகள் அம்பாறையில் தொடரும் – அமீர் அலி

-நாச்சியாதீவு பர்வீன் – விளையாட்டாக கல்லெறிந்தாலும் அல்லது விளையாட்டு அமைச்சர் கல்லெறிந்தாலும் எமது சேவைகளை அம்பாறையில் தொடரும். ஒரு அரசியல் கலகம் என்ன வேலையை செய்ய வேண்டுமோ அந்த வேலையை இந்த சமூகத்திற்காக எமது கட்சியும்,அதன் தலைமையும் கனகச்சிதமாய் செய்து வருகின்றது. அந்த விடயத்தில் நாங்கள் மிகத்தெளிவாகவே இருக்கிறோம் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் சட்டத்தரணி எம்.எஎஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கல்முனைத் தொகுதியின் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அமைப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி அவர்களின் தலைமையில் கல்முனையில்…

Read More

போதைப்பொருளை முற்றாக அகற்றுவது தொடர்பில் தீர்மானம்

-நாச்சியாதீவு பர்வீன் – மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம்,அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைமைகளான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி,இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்,மட்டு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறீநேசன், கிழக்கு மாகாண முதல்வர் ஹாபிஸ் நஸீர் அஹமட் ஆகியோரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ் அவர்களின் வழிநடத்தலில் இடம்பெறும் இந்நிகழ்வில் மட்டு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாண சபை உறுப்பினர்கள்,அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டுள்ளனர். மட்டு மாவட்டத்தின் ஒட்டுமொத்த…

Read More

பால் உற்பத்தியை பெருக்க வழி செய்ய வேண்டும் -அமீர் அலி

-நாச்சியாதீவு பர்வீன் – புதிதாக சிந்தித்து பால் உற்பத்தியை பெருக்க வழி செய்ய வேண்டும். நாம் இன்னும் நமது மூதாதையர்கள் நமக்கு காட்டித்தந்த வழியில் தான் பால் உற்பத்தியை மேற்கொள்கிறோம். அதனால் நமது உற்பத்தியில் முன்னேற்றம் இல்லை. அத்தோடு நமது தொழிலிலும் அபிவிருத்தி இல்லை மாறாக, புதிய வகையில் சிந்தனை செய்து பால் உற்பத்தியை பெருக்கும் வழிவகைகளை பாற்பண்ணையாளர்கள் கண்டறிய வேண்டும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ் அமீர் அலி தெரிவித்தார். வெள்ளாவெளி…

Read More

கல்குடா மீது சிலருக்கு கரிசனை ஏற்பட்டுள்ளது – அமீர் அலி

-நாச்சியாதீவு பர்வீன் – நாலாண்டுகளின் பின்னர் கல்குடா மீது சிலருக்கு கரிசனை ஏற்பட்டுள்ளது. கல்குடா மக்களின் வாக்குகளினால் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட ஒருவர் கடந்த நான்கு ஆண்டு காலமாக மெளனமாக இருந்து விட்டு, இப்போது இந்தப்பிரதேசத்தின் அபிவிருத்தி பற்றி கதை அளக்கிறார், இவ்வாறான நயவஞ்சக போக்குடைய,அரசியல் சுயலாபத்திற்காக எதனையும் பேசுகின்றவர்களுக்கு எதிர்கால அரசியல் நிலவரம் மிகச்சரியான பாடத்தினை கற்பிக்கும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். வாழைச்சேனை நிவ் ஸ்டார்…

Read More

சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் நவீன பொறிமுறை அவசியம் -அமீர் அலி

-நாச்சியாதீவு பர்வீன் – சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் நவீன பொறிமுறை அவசியம். இப்போது நாட்டில் பல பிரதேசங்களில் சிறுவர் துஷ்பிரயோகமும்,சிறுவர்கள் மத்தியில் போதைவஸ்த்து பாவனை பழக்கத்தை அதிகரிக்க வைக்கின்ற சட்டவிரோத செயற்பாடுகளும் அதிகம் காணப்படுகின்றன இவற்றை கட்டுப்படுத்தவும், போதைக்கு அடிமையாகிக்கொண்டிருக்கும் இளம் பரம்பரையை மீட்டெடுக்கவும் நவீன பாதுகாப்பு பொறிமுறை அவசியம் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் கருத்து வெளியிடும் பொதே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும்…

Read More

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்ய வேண்டும் – அமீர் அலி

-நாச்சியாதீவு பர்வீன் – வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்ய வேண்டும். தற்போது இலங்கையில் சமாதானச்சூழல் நிலவுகின்றது. பல்வேறு தொழிற்துறைகளுக்கான கேள்வியும் சாதகமான காலநிலையும் ஏற்பட்டுள்ளது. இந்தச் சாதகமான சந்தர்ப்பத்தை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். அதன் மூலம் இலங்கையில் பொருளாதார அபிவிருத்தியில் முன்னேற்றமடைவதோடு, வேலைவாய்ப்புப் பிரச்சினையும் கணிசமானளவு தீர்க்க முடியுமென கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ். அமீர் அலி கூறினார். நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய வேலைவாய்ப்பு நெருக்கடி பற்றி கேட்ட…

Read More

நீங்கள் உங்களை நேசிக்கின்ற ஜனாதிபதியை பெற்றுள்ளீர்கள்; பிரதியமைச்சர் அமீர் அலி

-நாச்சியாதீவு பர்வீன் – நீங்கள் அதிஸ்டசாலிகள் உங்களை நேசிக்கின்ற ஜனாதிபதியை பெற்றுள்ளீர்கள். இந்த நாட்டு மக்களையும், இந்த மாவட்டத்து மக்களையும் வெகுவாக நேசிக்கின்ற ஒரு விவசாய மகன் அவர், இந்தப்பிரதேசத்தில் விவசாயத்துறையை முன்னேற்றும் பல வேலைத்திட்டங்கள் எதிர் காலத்தில் கெளரவ ஜனாதிபதி அவர்களின் தலைமையில் இடம் பெற உள்ளன. அந்த வகையில் கெளரவ ஜனாதிபதி மைத்திரபால சிரிசேனவிக்கு நன்றியுடைய மக்களாக நீங்கள் இருக்க வேண்டும். ஏனெனில் இந்த மண்ணையும் மக்களையும் நேசிக்கின்ற உயர்ந்த உள்ளம் அவரிடம் இருக்கிறது…

Read More

ஏழை விவசாயிகளின் புன்சிரிப்பு நல்லாட்சிக்கான சமிக்ஞையாகும் – அமீர் அலி

-நாச்சியாதீவு பர்வீன் – ஏழை விவசாயிகளின் புன்சிரிப்பே நல்லாட்சிக்கான சமிக்ஞையாகும். இந்த நல்லாட்சி அரசாங்கம் விவசாயிகளின் நலன்கருதி செயற்படுகின்றது என்பதனை நீர்ப்பாசன இணைப்புத்திட்டம் நிறுவி நிற்கிறது. என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்கள் கூறினார். 24/07/2016 ஞாயிற்றுக்கிழமை சித்தான்டி,சின்னவெளி, சின்னாளன்வெளி கண்டத்தினால் ஏற்பாடு செய்த மாபெரும் அறுவடை நிகழ்வில் கெளரவ அதிதியா கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில் இந்த நல்லாட்சியை…

Read More

சகல இன மக்களினதும் மன நிம்மதிக்காக பிரார்த்தனை செய்கிறேன் – அமீர் அலி பெருநாள் வாழ்த்து செய்தி

மலரும் புனித நோன்புப் பெருநாளில் சகல இன மக்களினதும் மன நிம்மதிக்காக பிரார்த்தனை செய்கிறேன். சகலரும் நிம்மதியான, சந்தோசமான வாழ்வை இந்த புனித தினத்தில் அடைய வேண்டுமென்பதே எனது பேரவா ஆகும். என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தனது நோன்புப் பெருநாள் வாழ்த்து செய்தியில் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்… பல்லின சமூக கட்டமைப்பைக் கொண்ட எமது இலங்கைத்திரு நாட்டில், சகல இன மக்களும் இன பேதங்களைக்கடந்த, ஒற்றுமையுடனும்,பரஸ்பர விட்டுக்கொடுப்புடனும்,…

Read More

பேரினவாதிகளுடன் மட்டுமல்லாது மற்றவர்களுடனும் போராடவேண்டியுள்ளது – அமீர் அலி

அகதியாக வந்து தற்போது அதிதியாக நமது மனங்களில் வீற்றிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றிஷாத் பதியுதீன் தற்போது பௌத்த பேரினவாதிகளுடன் மட்டுமல்லாது மற்றவர்களுடனும் போராடவேண்டியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சருமான எம்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஸ்மார்ட் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்தார் நிகழ்வு அவ்அமைப்பின் தலைவர் கே.ஆர்.றிஸ்கான் முகம்மட் தலைமையில் மாளிகைக்காடு விஸ்மில்லா வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு…

Read More

மட்டு,மத்தி கல்வி வலயத்தின் அடைவு மட்ட வீழ்ச்சி சிந்திக்க வேண்டிய விடயமாகும் – அமீர் அலி

– அபூ செய்னப் – மட்டு,மத்தி கல்வி வலயத்தின் அடைவு மட்ட வீழ்ச்சி சிந்திக்க வேண்டிய விடயமாகும்.கடந்த காலங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது இந்த வீழ்ச்சியானது இந்த பிரதேசத்தில் வாழுகின்ற அனைத்து தரப்பினரையும் சிந்தித்து செயற்பட வேண்டிய நிலைக்கு தள்ளியுள்ளது என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். “ஈஸ்ட் கேட்” நிறுவனத்தின் அனுசரணையில் ஓட்டமாவடி பாத்திமா பாலிகா கல்லூரியில் இடம் பெற்ற இப்தார் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை…

Read More

நிரப்ப முடியாத அரசியல் வெற்றிடம் அலவி மெளலானா – அமீர் அலி

-அபூ செய்னப் – மூத்த அரசியல்வாதி அலவி மௌலானா அவர்களது மரணச்செய்தியானது மிகுந்த கவலையையும்,மன வேதனையையும் உண்டு பண்ணியுள்ளது. அவர் நிரப்ப முடியாத அரசியல் வெற்றிடமாகும். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிஊன். அவரது இழப்பு இலங்கை முஸ்லிம் அரசியலுக்கு பேரிழப்பாகும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். அஷ்ஷெய்க் அலவி மெளலானா அவர்களின் மரணச்செய்தியை கேள்வியுற்றதும் பிரதியமைச்சர் வழங்கிய இரங்கல் செய்தியில் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கூறுகையில், இலங்கையின் மூத்த…

Read More