Headlines

அவசர அம்பியூலன்ஸ் சேவை ஆரம்பம்

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் அவசர அம்பியூலன்ஸ் சேவையின் முதலாவது கட்டம் இன்று -28- வியாழக்கிழமை  ஆரம்பமானது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் காலி முகத்திடலில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அவசர அம்பியூலன்ஸ் சேவைக்கான 88 வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன. இச் சேவை முதலில் தென்மாணத்தில் காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த திட்டத்தால் சுமார் 470 உள்நாட்டு இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாயப்பு கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

1990க்கு அழையுங்கள்

முழுமையான வசதிகளுடன் அவசர அம்புலன்ஸ் சேவைக்கான தொடர்பை ஏற்படுத்துவதற்காக, 1990 என்ற தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்துவதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறியமுடிகின்றது. இந்தச் சேவையை, இலவசமாகவே முன்னெடுக்கப்பதற்கு அரசாங்கம்  கலந்துரையாடி வருவதாக அறியமுடிகின்றது. அந்த அம்புலன்ஸ் சேவையை சுகாதார அமைச்சுடன் இணைந்து, இந்தியாவின்  Vk.Emri  என்ற நிறுவனம் முன்னெடுக்கவுள்ளதாக அறியமுடிகின்றது.

Read More