Headlines

நிரப்ப முடியாத அரசியல் வெற்றிடம் அலவி மெளலானா – அமீர் அலி

-அபூ செய்னப் – மூத்த அரசியல்வாதி அலவி மௌலானா அவர்களது மரணச்செய்தியானது மிகுந்த கவலையையும்,மன வேதனையையும் உண்டு பண்ணியுள்ளது. அவர் நிரப்ப முடியாத அரசியல் வெற்றிடமாகும். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிஊன். அவரது இழப்பு இலங்கை முஸ்லிம் அரசியலுக்கு பேரிழப்பாகும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். அஷ்ஷெய்க் அலவி மெளலானா அவர்களின் மரணச்செய்தியை கேள்வியுற்றதும் பிரதியமைச்சர் வழங்கிய இரங்கல் செய்தியில் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கூறுகையில், இலங்கையின் மூத்த…

Read More

அலவி மௌலானாவின் மறைவு – அ.இ.ம.கா அனுதாபம் 

– ஊடகப் பிரிவு – மேல் மாகாண சபையின் முன்னால் ஆளுனர் மர்ஹ¬ம் அஸ்ஸெய்யித் அலவி மௌலானா அவர்களின் மரணச்செய்தி ஆழ்ந்த கவலையை தந்துள்ளது. முஸ்லிம்களின் மூத்த அரசியல் வாதிகளில் ஒருவரான மௌலானா சமூகத்துக்கும், நாட்டுக்கும் செய்த சேவைகள் இலகுவில் மறக்கக்கூடியதொன்றல்ல. சுதந்திரக்கட்சியின் ஆரம்ப காலத்திலிருந்தே, அக்கட்சியின் அங்கத்தவராக இருந்த அவர், கொள்கை பிரளாது கடைசிவரை அக்கட்சியிலேயிருந்து எல்லோரினதும் நம்பிக்கையையும் , நன்மதிப்பையும் பெற்றவராவார். சகலரிடமும் வேற்றுமை காட்டாது மும்மொழிகளிலும் சரளமாகவும் , அடுக்குத்தொடராகவும் நகைச்சுவையாகவும் பேசும்…

Read More

மௌலானாவின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது – அமைச்சர் றிஷாத்

மூத்த அரசியல்வாதியும், பிரபல தொழிற்சங்கத் தலைவருமான அலவி மௌலானாவின் மறைவு இலங்கை மக்களுக்கும், தொழிற்சங்க உலகிற்கும் பாரிய இழப்பாகும் என்று, அமைச்சர் றிசாத் பதியுதீன் அன்னாரின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார். ஆரம்பகாலத்தில் சிறந்த தொழிற்சங்கவாதியாகவும், பின்னர் அரசியலில் பிரதி அமைச்சராகவும், கெபினட் அமைச்சராகவும் பணிபுரிந்த மர்ஹூம் மௌலானா தனது இறுதிக் காலப் பகுதியில் மேல்மாகாண ஆளுனராகவும்  பணிபுரிந்தவர். அவர் முஸ்லிமாக இருந்த போதும் சிங்கள, தமிழ் மக்களுடன் மிக நெருக்கமான உறவையும், நட்பையும்…

Read More

அலவி மௌலானா காலமானார்

முன்னாள் மேல் மாகாண ஆளுனரும், பாராளுமன்ற உறுப்பினருமான அலவி மௌலானா தனது 84 ஆவது வயதில் இன்று காலமானார். 1948 ஆம் ஆண்டு தொழிற்சங்கவாதியாக அரசியலில் பிரவேசித்த இவர் 1956 ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து சுமார் 50 வருடங்களுக்கு மேலாக தனது அரசியல் சேவையை முன்னெடுத்திருந்ததோடு 2015 ஆம் ஆண்டு தனது அரசியல் வாழ்க்கையை நிறைவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More