Headlines

நீர்கொழும்பு வைத்தியசாலையில் அதிக வெப்பம் நோயாளிகள் திண்டாட்டம்!

நீர்கொழும்பு வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 3 கட்டிடங்களில் அதிக வெப்பம் நிலவுவதால் அங்கு நோயாளிகள் சிகிச்சைப் பெற முடியாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உருக்கு அல்லது இரும்பிலான பொருட்களைக் கொண்டு குறித்த கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளமையே இதற்கான காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், அதிக வெப்பம் காரணமாக குறித்த கட்டிடத்தினுள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள பெருந்தொகையான மருந்து வகைகளும் அழிவடைந்துள்ளதாக வைத்தியசாலையின் வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மக்களின் மில்லியன் கணக்கான பணத்தினைக் கொண்டு அவசரஅவசரமாக நிர்மாணிக்கப்பட்ட குறித்த கட்டடிமானது நோயாளர்களை தங்க வைப்பதற்கு…

Read More

சில ஆய்வக பரிசோதனைகளுக்கு நியாயமான விலை

தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படும் சில ஆய்வக பரிசோதனைகளுக்கு நியாயமான விலையை நிர்ணயிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. சீ.டி ஸ்கேன், எக்ஸ்ரே ஆகிய பரிசோதனைகள் இதில் அடங்குவதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். தற்போது 33 ஆய்வக பரிசோதனைகளுக்கு நியாயமாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read More

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு நவீன ரக சி.ரி. ஸ்கேனரை பெற்றுக் கொள்வதற்கு உதவி கோரல்

– அஷ்ரப் ஏ சமத், சத்தார் எம் ஜாவித் – மஹ­ர­கம புற்றுநோய் வைத்­தி­ய­சா­லைக்கு நவீன ரக பெற் சி.ரி ஸ்கேனர் ஒன்றை வழங்­க­வ­தற்கு இன, மத பேத­மின்றி ஒன்­றி­ணைந்து உத­வு­மாறு வேண்­டுகோள் விடுக்­கப்­பட்­டுள்­ளது. மஹ­ர­கம புற்றுநோய் வைத்­தி­ய­சா­லையில் சுமார் 1,100 பேர் தங்கி சிகிச்சை பெறு­வ­தா­கவும், அத­னை­விட நாளாந்தம் சுமார் 1,500 பேர் வரை சிகிச்­சை­களை பெற்றுச் செல்­வ­தற்­காக வருகை தரு­வ­தா­கவும் வைத்­தி­ய­சாலை தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. இதே­வேளை, இலங்­கையில் சுமார் ஒரு இலட்­சத்­திற்கும் அதி­க­மா­ன­வர்கள் இந்த நோயினால்…

Read More

சிறுவனின் கழுத்தில் சூடு வைத்த தந்தை கைது

– க.கிஷாந்தன் – சிறுவனின் கழுத்தில்  சூடு வைத்த குற்றச்சாட்டில் அச்சிறுவனின் தந்தையை, தலவாக்கலை பொலிஸார்  நேற்று மாலை கைதுசெய்துள்ளனர். தலவாக்கலை, நானுஓய தோட்டத்தைச் சேர்ந்த மதுஷான் என்ற சிறுவனே இச்சம்பவத்தில்  பாதிக்கப்பட்ட நிலையில், லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனக்கு கட்டுப்படாமல் குழப்பம் செய்தமையால் நெருப்பில் சூடு காட்டிய கரண்டியால் சுட்டதாக சிறுவனின் தந்தை பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார். இதனால், சிறுவனின் கழுத்துப் பகுதியில் எரிகாயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே மேற்படி…

Read More

பஸ் விபத்து: மாணவன் காயம்

– க.கிஷாந்தன் – ஹட்டன் நகரத்திலிருந்து இன்று (3) காலை 7.30 மணியளவில் டயகம நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று பாடசாலை மாணவன் மீது மோதியதால் மாணவன் படுகாயங்களுடன் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளான். இவ்விபத்து தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவருவதாவது, டிக்கோயா தரவளை பகுதியில் 8 வயதுடைய மாணவன் ஒருவன் தனது வீட்டிலிருந்து பாடசாலைக்கு செல்லும் வேளையில் ஹட்டனில் இருந்து டயகம நோக்கி பயணித்த தனியார் பஸ் மாணவனின் மீது…

Read More

வைத்தியசாலையை அண்டிய பகுதிகளில் பழுதடைந்த பழங்கள் விற்பனை

வவுனியா வைத்தியசாலையை  அண்டிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பழக்கடைகள் சிலவற்றில் பழுதடைந்த பழங்கள் விற்கப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். வவுனியா வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளர்களை பார்வையிட வருபவர்கள் அவர்களுக்காக பழங்களை கொள்வனவு செய்யும் போது பழுதாகிய மற்றும் அழுகிய நிலையில் உள்ள சில பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, சிறுவர்கள் கூட பழுதாகியமை தெரியாது பழங்களை வாங்கி கழுவிவிட்டு உண்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த  விடயம் தொடர்பில் வவுனியா நகரசபை மற்றும் பொது…

Read More

எம்பிலிபிட்டிய இளைஞனின் மரண அறிக்கை வெளியீடு

எம்பிலிபிட்டிய தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த இளைஞனின் மரண அறிக்கை இன்று வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ளது. இரத்தினபுரி வைத்தியசாலையின் மருத்துவ உத்தியோகத்தர் டி.பி.குணதிலகவால் தயாரிக்கப்பட்ட சட்ட மருத்துவ அறிக்கையை எம்பிலிபிட்டிய மேலதிக் நீதவான் பிரசன்ன பெர்ணான்டோ இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டார். பொலிஸாருடன் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் உயிரிழந்த இளைஞனின் மரணம் தொடர்பான சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் வெட்டு காயத்திலிருந்து அதிகளவு இரத்தம் வெயியேறியதால் மரணம் ஏற்பட்டதென கூறப்பட்டுள்ளது.

Read More