பெண்கள் வெளிநாடு செல்வதை நிறுத்த முடியாது.!
பெண்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடு செல்வதை நிறுத்த முடியாது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர், இலங்கையில் விவசாயம், ஆடை கைத்தொழில் உள்ளிட்ட வருமானத் துறைகள் வீழ்ச்சியடைந்து காணப்படுவதால் பெண்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வதை நிறுத்த முடியாது. வெளிநாடு செல்லும் தொழிலாளர்களின் வருமானம் மூலமே இலங்கைக்கு அந்நிய செலாவணி கிடைக்கின்றது. குறைந்த வயதில் பெண்கள் வெளிநாட்டுக்கு வேலை வாய்ப்புகளுக்கு செல்வதனூடாக , குறைந்த வயதிலேயே அவர்கள் பணம்…
