Headlines

சிறையில் கைபேசிப் பாவனைக்கு புதிய பாதுகாப்பு முறை

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது சில கையடக்கத் தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டமையை அடுத்து, சிறைச்சாலையை சூழவுள்ள பகுதியில் கையடக்கத் தொலைபேசிகளை பாவிக்க புதிய பாதுகாப்பு முறையொன்றை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகள் கைபேசியைப் பயன்படுத்தி பல்வேறு குற்றச் செயல்களை புரிய முயற்சிப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது. கடந்த காலங்களில் இடம்பெற்ற சில கொலைகள், ஆட் கடத்தல்கள் மற்றும் கொள்ளை போன்ற பல குற்றங்கள் சிறைச்சாலைகளுக்குள் உள்ள கைதிகளாலேயே…

Read More

சிங்கள ராவய பிக்குகள் மஹர சிறைக்கு மாற்றம்

அண்மையில் ஹோமாகம நீதவான் நீதிமன்ற வளாகத்தில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்க மறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சிங்கள ராவய அமைப்பின் இரண்டு பௌத்த பிக்குகளும் மஹர சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இடப் பற்றாக்குறை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக இவ்வாறு மஹர சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் மற்றும் படல்கும்புரே ஆரியசாந்த ஆகிய தேரர்களே கொழும்பு ரிமான்ட் சிறைச்சாலையிலிருந்து மஹர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். கொழும்பு ரிமான்ட் சிறைச்சாலையில்…

Read More