Headlines

ஹிருணிகா மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

இனந்தெரியாத நபர் ஒருவரை கடத்தியமை தொடர்பில் குற்றஞ் சுமத்தப்பட்டுள்ள ஹிருணிகாவின் வழக்கு மீதான விசாரணை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 26ஆம் திகதி நடைபெறும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. அத்துடன், இந்த வழக்கின் முன்னேற்றமான விசாரணை அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றத்தினால் பொலிஸாருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த வழக்கு விசாரணையில் குற்றஞ் சுமத்தப்பட்டுள்ள ஹிருணிகா உள்ளிட்ட 8 பேருக்கு எதிரான வழக்கிற்காக சட்டமா அதிபரின் அறிவுறுத்தல் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். மேலும், குறித்த…

Read More

பனாமா ஆவணக்கசிவில் இலங்கையர் தொடர்பு குறித்து விசாரணை

பனாமா நாட்டை தளமாக கொண்ட மொஸாக் ஃபொன்செக என்ற சட்ட நிறுவனத்தின் கசிந்துள்ள ஆவணங்களில் இலங்கையர்கள் தொடர்புபட்டுள்ளார்களா என்பது குறித்து அரசாங்கம் வெளிப்படையாக விசாரணைகளை முன்னெடுக்குமென அரச தொழில் முயற்சிகள் பிரதி அமைச்சர் எரான் விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சீஷெல்ஸ் நாட்டுடன் மிக நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்தமையால் இது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும், அரசாங்கம் என்ற வகையில் நாட்டின் சட்டங்கள், சர்வதேச சட்டங்கள், பணப்பரிமாற்றச் சட்டங்கள் என்பன மீறப்பட்டுள்ளனவா என்பது குறித்து…

Read More

மின்தடையால் ஏற்பட்ட வினை

மட்டக்களப்பு – காத்தான்குடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் வீடொன்றின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. நேற்று (13) நாடுபூராகவும் ஏற்பட்ட மின்தடையின் காரணமாக வெளிச்சத்திற்காக ஏற்றி வைக்கப்பட்ட மெழுகுவர்த்தியால் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மஞ்சந்தொடுவாய் தொழிநுட்ப கல்லூரி வீதியில் வசிக்கும் கோமலன் சுதா என்பவரின் வீட்டிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு சுமார் 9.00 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் வீட்டில் இருந்த கட்டில், அலுமாரி,…

Read More

நாமல் ராஜபக்சவுக்கு எதிரான விசாரணைகள் தீவிரம்!

பாராளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு அரசாங்கத்துடன் வர்த்தக உடன்படிக்கைகளை செய்து 307 மில்லியன் ரூபாக்களை சம்பாதித்தமை தொடர்பில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிரான விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் கொழும்பு 5ல் உள்ள நாமல் ராஜபக்சவுக்கு சொந்தமானது என கருதப்படும் என்.ஆர். கண்சல்டன்ஸ் மற்றும் க்வர்ஸ் ஹோல்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் அமைந்துள்ள அலுவலகங்களில் இருந்து கடுவலை நீதிவானின் உத்தரவுக்கு அமைய 12 ஆவணங்களும் 4 கணினிகளும் புலனாய்வாளர்களால் கைப்பற்றப்பட்டு தீவிர விசாரணைகள்…

Read More

யோஷிதவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கடுவளை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீ.எஸ்.என் எனும் தொலைக்காட்சி நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில், குறித்த ஐவரும் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், சி.எஸ்.என் தொலைக்காட்சி தொடர்பான வழக்கு விசாரணைக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஷ உட்பட ஐந்து பேர் இன்று காலை கடுவலை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோதே அவர்களை தொடர்ந்தும்  மார்ச் மாதம் 24ஆம் திகதி…

Read More

2,700 பாடசாலைகளில் இணையத்தள இணைப்புகள் துண்டிப்பு

இணையத்தள கட்டணங்கள் செலுத்தப்படாமையினால் நாடெங்கிலுமுள்ள சுமார் 2700 பாடசாலைகளில் இணையத்தளத் தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது பாடசாலை மாணவர்களுக்கான ‘ஸ்கூல் நெட்’ எனப்படும் சேவையினை கடந்த அரசாங்கம் அறிமுகப்படுத்தியிருந்தது. இதனடிப்படையில் நாடெங்கிலுமுள்ள அரச பாடசாலைகளுக்கு இலவச இணையத்தள வசதியினை வழங்கியிருந்தது. மேலும் இணையத்தள வசதிக்காக ஒவ்வொரு பாடசாலையும் மாதாந்தம் 7 ஆயிரம் ரூபா முதல் 9 ஆயிரம் ரூபா வரை…

Read More

சர்வதேச நீதிமன்றம் குறித்து பேசவில்லை

மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிமன்றம் என்பது மிகவும் அரிதான விடயமாகும்.  எமது அறிக்கையில்  நாங்கள் சர்வதேச நீதிமன்றம் குறித்து பேசவில்லை.  அதற்கான நியாயாதிக்க செயற்பாடுகள் எந்தளவு கடினமானவை என எங்களுக்குத்  தெரியும்.   இது தொடர்பில்  இலங்கையில் சட்டமூலங்கள் நிறைவேற்றப்படவேண்டும். இலங்கைப் பாராளுமன்றத்தில் அவ்வாறான  சட்டமூலங்கள் நிறைவேற்றப்படுவது கடினமான செயற்பாடாகும். எனவே இங்கு சர்வதேச நீதிமன்றம் என்ற   விவகாரம்  விவாதத்திற்குட்படவேண்டிய அவசியமில்லை.  இது  இலங்கையின் செயற்பாடாகவே அமையும்    என்று…

Read More

மின்னஞ்சலை மையப்படுத்திய விசாரணையிலேயே யோஷித்த சிக்கினார்

சி.எஸ்.என். தொலைக்காட்சி அலைவரிசை ஊடாக முன்னெடுக்கப்பட்ட கறுப்புப் பணம் சுத்திகரித்தல் சட்டத்தின் கீழான குற்றங்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியின் மகன் லெப்டினன் யோஷித்த ராஜபக்ஷவை கைது செய்ய குறித்த தொலைக்காட்சி நிறுவனத்தின் மின்னஞ்சல் ஆதாரங்களே பிரதானமாக இருந்ததாக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் கேசரிக்கு தெரிவித்தார். சி.எஸ்.என். நிறுவனத்தின் தீர்மானங்கள் எடுக்கும் ஏக நபராகவும் தலைவராகவும் யோஷித்த ராஜபக்ஷவே செயற்பட்டுள்ளார் என்பதை அந்த தொலைக்காட்சி நிறுவனத்தின் மின்னஞ்சலை விஷேட ஆய்வுகளுக்கு உட்படுத்திய போதே…

Read More

மஹிந்த, ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாரிய ஊழல் மோசடி விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். சுயாதீன தொலைக்காட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே இங்கு ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More