Headlines

அரச சேவையாளர்களுக்கு 2 வாரங்களில் வாகன உறுதிப்பத்திரங்கள்!

அரச சேவையில் உள்ளவர்களுக்கு வாகன உறுதிப்பத்திரங்கள் இன்னும் இரண்டு வாரங்களில் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரச பரிபாலன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கான ஆவணங்களை நிதி அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ளதாக அந்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. வாகனங்கள் பெற்றுக்கொள்வதற்கு தகுதியான அரச ஊழியர்களுக்கு வாகன உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அரச ஊழியரின் சேவை காலத்தில் 60 ஆண்டுகள் நிறைவடையும்போது 3 வாகன உறுதிப்பத்திரங்கள் பெற்றுக் கொள்வதற்கு எதிராக அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு தெரிவித்திள்ளது

Read More

அடுத்துவரும் 6 மாதங்களுக்கு இலங்கைக்கு ஜப்பான் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட மாட்டாது

இந்த மாதம் முதல் அடுத்துவரும் 6 மாத காலத்துக்குள் இலங்கைக்கு ஜப்பான் வாகனங்களை இறக்குமதி செய்வதை நிறுத்தி வைத்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் மற்றும் ஸ்ரீ லங்கா வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் என்பன இணைந்து அறிவிப்புச் செய்துள்ளன. தொடர்ந்தேர்ச்சியாக வாகனத்தின் விலையில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை வாகன இறக்குமதியாளர்களுக்கு பெரும் பிரச்சினையாக காணப்படுவதாகவும் இதனாலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அச்சங்கத்தின் தலைவர் சம்பத் மெரிஞ்சிகே தெரிவித்துள்ளார். தற்பொழுதுள்ள நிலையில், ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சிறிய ரக…

Read More

வாகனங்களின் விலைகள் அதிகரிக்கும்

‘இலங்கை ரூபாவின் பெறுமதி குறைந்ததாலும் இறக்குமதி வரியை குறைக்கும் சாத்;தியம் இல்லை என்பதால், வாகனங்களின் விலைகள் அதிகரிக்கப்படும்’ என்று இலங்கை வாகன இறங்குமதிகள் சங்கத்தின் தலைவர் மஹிந்த சரத்சந்திர கூறினார். ‘வற்’ வரி தொடர்பிலான கலந்துரையாடலொன்று வாகன உரிமையாளர் சங்கத்திலுள்ள மூன்று நிறுவன உரிமையாளர்களுக்கும் பிரதமர் மற்றம் நிதியமைச்சருக்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை (28) இடம்பெற்றது. இதன்போது, வரியை குறைக்க முடியாது என்று நிதியமைச்சர் கூறியுள்ளார். இதனால் வாகனங்களின் விலைகள் 300,000 ரூபாயிலிருந்து 400,000 ரூபாய் வரைஅதிகரிக்கப்படும். முன்னர்…

Read More

மதுபோதையில் ஓடினால் இனிமேல் ஓட முடியாது

தமிழ் – சிங்கள சித்திரைப் புத்தாண்டுக் காலத்தில், மது போதையில் வாகனம் செலுத்துத்துவோரின் வாகன அனுமதிப்பத்திரத்தை மீண்டும் கையளிக்கப்போவதில்லை என்றும், நேற்று திங்கட்கிழமை முதல் இந்த நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பு தொடர்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அமரசிறி சேனாரத்ன தெரிவித்தார். ‘இதற்கு முன்னரும், மது போதையில் வாகனம் செலுத்தியவர்களின் வாகன அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொண்டு தற்காலிக அனுமதிப்பத்திரமொன்றை வழங்கி வந்தோம். ஆனால், நேற்று முதல், அந்த நடைமுறையை அமுலில் இருக்காது….

Read More