Headlines

வத்தளை நடைபயிற்சிப் பாதையின் மீள்நிர்மாணப்பணிகள் நிறைவு

சிலரால் உடைத்து நாசப்படுத்தப்பட்ட, வத்தளை, களுஎலவுக்கு அண்மையில் அமைக்கப்பட்டிருந்த நடைபயிற்சிப் பாதையின் மீள்நிர்மாணப்பணிகள் நிறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைப்பயிற்சிப் பாதை, குடியிருப்புப் பகுதிவரை அமைக்கப்பட்டுள்ளதாகவும் நிரந்தர வடிகாலமைப்புத் தொகுதி அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இப் பாதை, மக்கள் பாவனைக்காக விரைவில் திறக்கப்படும் என காணி, சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் இணைப்புச் செயலாளர் மிஹிரி டி சில்வா தெரிவித்துள்ளார்.

Read More

வத்தளை நடைபாதை விவகாரம் – ஐவர் விளக்கமறியலில்

வத்தளை பகுதியில் இருந்த நடைபாதை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். வத்தளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட இவர்கள்; நேற்று (3) மஹர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து இவர்களை எதிர்வரும் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Read More

கொழும்பு – நீர்கொழும்பு வீதியில் போக்குவரத்து நெரிசல்

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த வீதியின் வத்தளை – மாபோலை பகுதியில் கொள்கலன் பார ஊர்தியொன்று மின் கம்பத்தில் விபத்திற்குள்ளானதினாலேயே பிரதான வீதி ஊடான போக்குவரத்தில் நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Read More

வத்தளையில் கடலுக்கு நீராட சென்ற இருவர் பலி

வத்தளை – பிரிதிபுர கடலில் நீராட சென்ற இருவர் நேற்று (28) மாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தலவாக்கலை – லிந்துலை – பரகம் பிரதேசத்தை சேர்ந்தவர்களே பலியாகியுள்ளனர். குறித்த இருவரும், மேலும் சில நபர்களுடன் நீராட சென்ற போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் சடலங்கள், ராகம போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More