Headlines

ரயில் சேவைகள் பாதிப்பு.!

வனவாசல பகுதியில் நேற்றிரவு (7) கெண்டனர் வாகனம்  ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் அந்த வழியாக செல்லும் ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. விபத்து காரணமாக ரயில் பாதைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதனை திருத்தும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Read More

ரயில் மோதி ஒருவர் பலி

கம்பஹா ரயில் கடவையில், கடமையில் ஈடுபட்டிருந்த ஊழியர் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார். நேற்று மாலை பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் பெம்முல்ல ரயில் பாதையின் மேற்பார்வை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த விபத்து  இடம்பெற்றுள்ளது. பெம்முல்ல ரயில் கடவையில் காவலாளியாக கடமையாற்றிய அத்தனகல்ல பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய நபரே ரயில் மோதுண்டு  உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது

Read More