யோஷிதவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களில் ஒருவரான யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவருக்கான விளக்கமறியலும் எதிர்வரும் மார்ச் மாதம் 10ஆம் திகதி வரையிலும் கடுவலை நீதவான் நீதிமன்றத்தினால் நீடிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களில் ஒருவரான யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவருக்கான விளக்கமறியலும் எதிர்வரும் மார்ச் மாதம் 10ஆம் திகதி வரையிலும் கடுவலை நீதவான் நீதிமன்றத்தினால் நீடிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோசித்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவரின் மீளாய்வு மனு எதிர்வரும் 29ம் திகதி பரிசீலிக்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. யோசித்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவரும் சி.எஸ்.என் தொலைகாட்சி ஊடாக இடம்பெற்ற பாரிய முறைகேடுகள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் கொழும்பு உயர்நீதிமன்றத்துக்கு வருகை தந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மஹிந்தவின் இரண்டாம் புதல்வர் யோஷித ராஜபக்ஷ பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் மற்றும் பணச்சலவை குற்றச்சாட்டுகளின் பேரில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிரான வழக்கை விசாரிக்கும் கடுவலை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் யோஷித்தவின் விளக்கமறியல் காலத்தை தொடர்ந்தும் நீடித்துள்ளது. இந்நிலையில் யோஷித்த ராஜபக்ஷவுக்கு பிணை வழங்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் பிணைமனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள…
டயலொக் றக்பி லீக் போட்டியின் போது, ‘Y007’ என எழுதப்பட்டிருந்த பட்டியை கைகளில் அணிந்திருந்த, கடற்படை விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த வீரர்கள் நால்வரை இடைநிறுத்தியுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் அக்ரம் அலவி தெரிவித்தார். தியகமயில், ஞாயிற்றுக்கிழமை(14) இடம்பெற்ற போட்டியின் போதே, கடற்படை விளையாட்டுக் கழகத்தின் முன்னாள் தலைவர் யோஷித ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், குறித்த வீரர்கள் பட்டிகளை அணிந்திருந்தனர். இதற்கமையவே, குறித்த வீரர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகள் இடம்பெறும் எனவும் கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.tm
சி.எஸ்.என். தொலைக்காட்சி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஸ உள்ளிட்ட ஐவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைப்பகுதி விசேட வலயமாக்கப்பட்டுள்ளது. யோசித உட்பட ஐவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைப்பகுதியில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய கைதிகள் அகற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் எச்.என்.சீ.தனசிங்க தெரிவித்துள்ளார். இந்த சிறைப்பகுதிக்கு அருகில் உள்ள சிறையில் இருந்து கையடக்கத்தொலைப்பேசி ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. இதுவே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தநிலையில், பணச்சலவை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட யோசித உள்ளிட்ட ஐவரும் எதிர்வரும்…
ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்யவே மக்கள் எமக்கு இருமுறை ஆணை வழங்கினார்கள். கடந்த ஒருவருட காலமாக நிதி மோசடி விசாரணை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் யோஷித ராஜபக் ஷ குற்றவாளியாக இனம்காணப்பட்ட பின்னரே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார். தோப்பூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் யோஷித ராஜபக்ஷவின் கைது தொடர்பாக கருத்துவெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய…
யோஷித ராஜபக்ஷவை எதிர்வரும் 25 ஆம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கடுவல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோஷித்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினரை இன்று மீண்டும் கடுவல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளது. சீ.எஸ்.என் தொலைக்காட்சியில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் யோஷித்த உள்ளிட்ட நால்வர் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்படுவார் என பரவலாக நேற்றைய தினம் ஊடகங்களில் பேசப்பட்ட யசாரா வெளிநாடு சென்றிருப்பதாக வெளியாகிய தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என தெரியவந்துள்ளது. இந்த விடயத்தை யசாராவே தனது பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார்.சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் நிதி மோசடி குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுத்துவரும் நிலையிலேயே அவர் கைது செய்யப்படலாம் என செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த விசாரணைகளில் கடந்த வாரம் யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட மேலும் ஐவர் கைது…
சிறைசாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரும் சிறைச்சாலை உணவுகளை உட்கொள்ள மறுப்புத் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் (1) முதல் மூன்று வேளை உணவுகளையும் வீட்டில் இருந்து பெற்றுக் கொள்வதற்கு அனுமதி கேட்டுள்ளதாகவும் அவர்களின் கோரிக்கை படி வீட்டிலிருந்து உணவு கொண்டு வந்து வழங்குவதற்கு சிறைச்சாலை திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டதாகவும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.