உதவி பொலிஸ் அத்தியட்சகரை கைது செய்ய உத்தரவு
எம்பிலிப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பாக இருந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சர் டீ.டப்ளியூ.சி.தர்மரத்ன மற் றும் எம்பிலிப்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இருந்த தலைமை பொலிஸ் பரிசோதகர் எஸ்.ஆர்.ஜே.டயஸ் ஆகியோரை உடனடியாகக் கைதுசெய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு எம்பிலிபிடிய நீதவான் நீதிமன்றின் மேலதிக நீதிவான் பிரசன்ன பெர்ணான்டோ இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். கடந்த 4 ஆம் திகதி இரவு எம்பிலிபிடிய பகுதியில் இடம்பெற்ற விருந்து நிகழ்வொன்றின் போது, பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் படு…
