Headlines

லண்டனுக்கு பயணமானார் ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (11) காலை 10.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கி பயணமானார். லண்டனில் நாளை ஆரம்பமாக உள்ள ஊழல் ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக 15 பேர் கொண்ட குழுவினருடன் ஜனாதிபதி, எமிரேட்ஸ் விமானச் சேவைக்கு சொந்தமான நுமு651 என்ற விமானத்தில் பயணமானார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஜனாதிபதி பிரித்தானியா பயணம், டேவிட் கமருனுடன் முக்கிய பேச்சு

மைத்திரிபால சிறிசேன இரண்டு நாள் பயணமாக இன்று -10- இரவு பிரித்தானியாவுக்குச் செல்லவுள்ளார். நாளை மறுநாள் பிரித்தானியாவில் நடைபெறவுள்ள ஊழல் ஒழிப்பு தொடர்பான அனைத்துலக மாநாட்டில் பங்கேற்கவே மைத்திரிபால சிறிசேன லண்டன் செல்லவுள்ளார். இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர். இந்த மாநாட்டின் ஒரு பக்க நிகழ்வாக, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூனை மைத்திரிபால சிறிசேன சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். அத்துடன், சிறிலங்காவில் ஊழலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்குத் தேவையான நிபுணத்துவ உதவிகளை வழங்குமாறும் அவர், பிரித்தானியப் பிரதமரிடம்…

Read More

மஹிந்தவிற்கு இராணுவ பாதுகாப்பு வழங்க முடியாது!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு வழங்கப்பட முடியாத இராணுவப் பாதுகாப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு வழங்க முடியாது என விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Read More

மஹிந்தவால் தான் ஆட்சிக்கு வந்தோம், அவரை பாதுகாப்பது எமது கடமை : சபையில் பிரதமர்

மஹிந்த ராஜபக்ஷவினால் தான் நாம் ஆட்சிக்கு வந்தோம். எனவே அவரை பாதுகாக்க  வேண்டியது எமது கடப்பாடாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று  சபையில்  தெரிவித்தார். உலகில்  எந்தவொரு முன்னாள் ஜனாதிபதிகளுக்கும்  இராணுவ பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை.  ஆனால் மஹிந்த ராஜபக்ஷவின்  பாதுகாப்பு தொடர்பில் பேச்சு நடத்த அரசு தயார் என்றும் பிரதமர் சபையில் அறிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று  செவ்வாய்க்கிழமை தினேஷ் குணவர்தன எம்.பி.,  முன்னாள்   ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின்  இராணுவப் பாதுகாப்பு  நீக்கப்பட்டது தொடர்பில் பிரதமரிடம்…

Read More

போதையற்ற குடும்பம் உருவாக வேண்டும் – ஜனாதிபதி

போதைபொருள் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தல் தொடர்பாக பொலிஸார் தினமும் தனியாக பல மணித்தியாலங்களை ஒதுக்கி நேரடிப் பங்களிப்பை வழங்க வேண்டுமென தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,போதையிலிருந்து மீட்டு சுதந்திரமான நாட்டை உருவாக்கி போதையற்ற குடும்பம் உருவாக வேண்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். போதையிலிருந்து சுதந்திரம் பெற்ற நாடு என்ற தொனிப் பொருளிலான தேசிய போதைபொருள் தடுப்பு வேலைத்திட்டத்தின் 5 ஆம் கட்டம் குருநாகலையை மையப்படுத்தி மாளிகாபிட்டிய மைதானத்தில் ஜனாதிபதியால் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது உரையாற்றுகையிலேயே…

Read More

பழிவாங்கலாலேயே ஜனாதிபதியானேன்

‘அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானமையின் பயனாகவே, இறுதியில் இந்த நாட்டின் ஜனாதிபதியாக வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது’ என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார். ‘இதேவேளை, அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாகும் அரச உத்தியோகஸ்தர்களுக்கு தேவையான சலுகைகளை வழங்குவதற்காக குழுவொன்று நியமிக்கப்படும்’ என்றும் அவர் குறிப்பிட்டார். கொழும்பு தாமரைத் தடாக மண்டபத்தில் இன்று (29) இடம்பெற்ற அரச நிர்வாகச் சேவையின் 33ஆவது வருட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்நிகழ்வில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அமைச்சர்கள்…

Read More

‘நான் தனியாகச் செய்யவில்லை’

‘அன்று அரசாங்கம் செய்தவற்றுக்கு இந்த அரசாங்கம், எதிர்க்கட்சியைக் குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கின்றது. இவை எல்லாவற்றையும் நான் தனியாகச் செய்யவில்லை. அவற்றை தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால  சிறிசேனவும் அங்கம் வகித்த அமைச்சரவையும் சேர்ந்தே செய்தது’ என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். எம்பிலிப்பிட்டியலில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர், மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ‘ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தப் பொறுப்புகளிலிருந்து தப்பிச்செல்ல முடியாது. மக்களை ஏமாற்றுவதற்காக, எதிர்க்கட்சியின் மீது குற்றஞ்சாட்டவும் கூடாது’…

Read More

தீவிரவாதத்தை ஒழிக்க ஒன்றிணைய வேண்டும்!

தீவிரவாதத்தை ஒழிக்க தெற்காசிய வலயம் ஒன்றிணைய வேண்டும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் லாகூர் நகரில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ட்விட்டர் பக்கத்தில் அவர் இந்த விடயத்தை பதிவிட்டுள்ளார். இராணுவத்தினருக்கு மேலாக தாய் நாட்டை கௌரவத்துடன் பாதுகாக்க புதிய அரசாங்கம் சர்வதேசத்துடன் நம்பிக்கையோடு செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த வௌ்ளிக்கிழமை இடம்பெற்ற குறித்த தாக்குதலில் 70 பேர் பலியானதோடு, பலர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

மாகாணசபைகளுக்கு நேரடியாக நிதி ஒதுக்கீடு செய்ய ஜனாதிபதி தீர்மானம்

மாகாணசபைகளுக்கு நேரடியாக நிதி ஒதுக்கீடு செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். கடந்த காலங்களைப் போன்றே எதிர்வம் 2016ம் ஆண்டிலும் மாகாணசபைகளுக்கு நேரடியாகவே நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. இதற்கு முன்னதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க சமர்ப்பித்த வரவு செலவுத்திட்டத்தில் மாகாணசபைகளுக்கு, உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சின் ஊடாக நிதி ஒதுக்கீடு செய்ய பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. எனினும் இந்த யோசனைத் திட்டத்தை மாகாண முதலமைச்சர்கள் கடுமையாக எதிர்த்திருந்தனர். ஜனாதிபதி, நிதி அமைச்சர், உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும்…

Read More