Headlines

மைத்திரியுடன் மே தின சமரில், மஹிந்த படுதோல்வி

– நஜீப் பின் கபூர் – நேற்று (01) நடைபெற்ற மே தினம் ஜனாதிபதி மைத்திரிக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்குமிடையிலான ஒரு நேரடி யுத்தமாகவும் ஒரு கௌரவப் பிரச்சினையாகவும் இருந்தது. இலங்கை வரலாற்றில் மிகப் பெரிய மே தினத்தை நாம் கிருலபனையியே நடாத்துவேம் என்று அவர்கள் நேற்றுவரை மார் தட்டிக் கொண்டிருந்தார்கள். அதே போன்று தங்கள் அணியிலுள்ள 52 பேரில் மூன்று பேரைத்தவிர ஏனைய அனைத்துப் பாரளுமன்ற உறுப்பினர்களும் கட்டாயம் கிருலபனைக்கு சமூகம் தருவார்கள் என்றும் அவர்கள்…

Read More

மே தினம் மறக்கக் கூடாத வரலாறு! (கட்டுரை)

– S.சஜீத் – இப்போதெல்லாம் அரைத் தூக்கத்தில் எழுந்து அவசர அவசரமாகப் பள்ளிக்கு ஓடுகிறோம். அப்பாவும், பல வீடுகளில் அம்மாவும் மற்றொரு பக்கம் வேலைக்கு ஓடுகிறார்கள். மாலையில் அனைவரும் களைத்துப்போய்விடுகிறோம். ஆனால் அம்மா மட்டும் வேலைக்குச் சென்று வந்தாலும்கூட வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்கிறார்கள். தொடர்ந்து அவர்கள் உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். இந்த உலகம் ஒவ்வொரு நொடியும் இயங்க மனித உழைப்புதான் காரணமாக இருக்கிறது. ஆனால், ஒருவர் எதற்காக உழைக்கிறார்? மகிழ்ச்சியாக வாழ்வதற்காக! ஆனால், நாள் முழுக்க உழைத்துக்கொண்டே இருப்பவர்களுக்கு…

Read More

சு.க எம்.பி.க்கள் தனித்துப் பேச்சு

தனித்து மேதின ஊர்வலமொன்றை நடத்துவதா இல்லையா என்பது தொடர்பான இறுதித் தீர்மானமொன்றை எட்டுவதற்காக, கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, இவ்வாரத்தில் கூடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கூட்டு எதிரணியின் கொள்கை மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நடைமுறை நடைமுறைச் செயற்றிட்டங்கள் தொடர்பில், இந்தக் கூட்டத்தின் போது கலந்துரையாடப்படும் என்று சு.க.வின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். தாங்கள் தனித்து மேதின ஊர்வலமொன்றை நடத்தப்போவதாக, கூட்டு எதிரணியினர் கடந்த…

Read More

மஹிந்த கலந்து கொள்வார்

பொது எதிர்க்கட்சியின் மேதினக் கூட்டத்தில் முனனாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ கலந்து கொள்வார் என மஹிந்த ஆதரவு எம்.பி. வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். எமது அணியைச் சேர்ந்த எவரும் அரசுடன் இணையப் போவதில்லையென்றும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக வாசுதேவ நாணயக்கார எம்.பி. மேலும் தெரிவிக்கையில்; பொது எதிர்க்கட்சியின் மேதினக் கூட்டம் இம்முறை கிருலப்பனை மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேதின ஊர்வலம் நாரஹேன்பிட்டி, சாலிகா மைதானத்திலிருந்து ஆரம்பமாகி கிருலப்பனை மைதானத்தை வந்தடைந்து மாலை 3.00 மணிக்கு பொதுக்கூட்டம்…

Read More

பொது எதி­ர­ணியின் மேதின கூட்டம் நார­ஹேன்­பிட்­டியில்

உழைக்கும் மக்­களின் உரி­மை­களை வலி­யு­றுத்­தியும் , நாட்­டிற்கு ஜன­நா­யக ஆட்­சியை கோரியும் கூட்டு எதிர் க்கட்­சியின் மே தின கூட்டம் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் தலை­மையில் நார­ஹேன்­பிட்­டியில் நடை­பெறும். ஜன­நா­ய­கத்தை நேசிக்கும் அனை­வரும் கூட்டு எதிர் கட்­சியின் மே தின கூட்­டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தினேஷ் குண­வர்­தன தெரி­வித்தார்.

Read More