Headlines

மன்னார் கடலில் கலவரம்

மன்னார் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற மீன்பிடிப் படகொன்றின் மீது, மற்றுமொரு படகில் வந்த சிலர் தாக்குதல் மேற்கொண்டதால், அப்படகில் இருந்த மூன்று மீனவர்களில் ஒருவர், கடலில் குதித்து சுமார் 10 கிலோமீற்றர் தூரம் நீந்தி கரை சேர்ந்துள்ளார். ஏனைய இருவரும் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தின் போது, மேற்படி மீனவர்கள் மூவர் மீதும் கடுமையாக தாக்குதல் நடத்தப்பட்டதாக உயிர் தப்பிய மீனவர், பொலிஸாரிடம் சென்று அறிவித்துள்ளார். இந்நிலையில், மாயமாகியுள்ள மீனவர்கள் இருவரையும் தேடும்…

Read More

மீனவர்களுக்கான விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்

மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்களின் உயிர் பாதுகாப்பிற்காக விசேட தொலைபேசி இலக்கம் இரண்டு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதற்கமைய 011-2346134 மற்றும் 0722244063 என்ற இரண்டு இலக்கங்களே கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களாகும். இதேவேளை, கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கு ஏற்படும் ஆபத்துக்கள் தொடர்பில் இந்தத் தொலைபேசி இலக்கங்களுக்கு தெரிவிக்க முடியும் என்பதோடு இதன்பொருட்டு நவீன உயிர்காப்பு உபகரணங்களோடு வைத்தியர் உள்ளிட்ட 6 ஊழியர்களைக் கொண்ட குழுவுடனான உயிர்காப்பு படகொன்று சேவையில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

12 இந்திய மீனவர்கள் கைது

அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் நேற்றைய தினம் (10) கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. இவர்கள் பயணித்த இரண்டு இழுவை படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைதானவர்கள் மீன்பிடி மற்றும் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளனர்.

Read More

இலங்கையில் லைலா, சுருக்கு வலைகளுக்கு 21முதல் தடை

இந்திய மீனவர்களின் இழுவைப் படகு மீன்பிடியை இலங்கை ஏற்றுக் கொள்ளாது என்று மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் இந்தக் கருத்தை அவர் வெளியிட்டுள்ளார். “லைலா மற்றும் சுருக்கு” மீன்பிடிகளை காட்டிலும் இழுவைப் படகுகள் மூலமான மீன்பிடி பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. எனவே இதனை இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் இலங்கைக்கு வந்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சரிடம் இந்த விடயத்தை வலியுறுத்தவுள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தம்மிடம்…

Read More