Headlines

மன்னார் கடலில் கலவரம்

மன்னார் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற மீன்பிடிப் படகொன்றின் மீது, மற்றுமொரு படகில் வந்த சிலர் தாக்குதல் மேற்கொண்டதால், அப்படகில் இருந்த மூன்று மீனவர்களில் ஒருவர், கடலில் குதித்து சுமார் 10 கிலோமீற்றர் தூரம் நீந்தி கரை சேர்ந்துள்ளார். ஏனைய இருவரும் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தின் போது, மேற்படி மீனவர்கள் மூவர் மீதும் கடுமையாக தாக்குதல் நடத்தப்பட்டதாக உயிர் தப்பிய மீனவர், பொலிஸாரிடம் சென்று அறிவித்துள்ளார். இந்நிலையில், மாயமாகியுள்ள மீனவர்கள் இருவரையும் தேடும்…

Read More

12 இந்திய மீனவர்கள் கைது

அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் நேற்றைய தினம் (10) கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. இவர்கள் பயணித்த இரண்டு இழுவை படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைதானவர்கள் மீன்பிடி மற்றும் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளனர்.

Read More

கடற்றொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உபகரணங்களை பாவிக்க தடை

மீன்பிடி நடவடிக்கைகளின்போது பாதிப்பை ஏற்படுத்தும் உபகரணங்களை இன்று (6) முதல் பாவிப்பதற்கு தடை விதிப்பதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. கடற்றெபாழிலின்போது பாதிப்பை ஏற்படுத்தும் உபகரணங்கள் தொடர்பில் மேற்கொண்ட ஆய்வு அறிக்கையை நாரா நிறுவனம் கடற்றொழில் அமைச்சரிடம் இன்று கையளித்துள்ளது. லைலா வலை மற்றும் சுறுக்கு வலை என்பவற்றைப் பயன்படுத்தி மீனிபிடித் தொழிலில் ஈடுபட தடை விதிப்பதாக அமைச்சர் இதன் போது  அறிவித்துள்ளார். இன்று முதல் இது சட்டமாக்கப்படுவதாக இந்த நிகழ்வின் போது அமைச்சர் குறிப்பிட்டார். இதேவேளை வெடிபொருட்களை…

Read More