Headlines

மின்சார சபையின் யோசனையை பயன்பாட்டு ஆணைக்குழு நிராகரிப்பு

55 மெகாவோட்ஸ் அளவு சக்திவளத்தை கொள்முதல் செய்ய இலங்கை மின்சாரசபை முன்வைத்த யோசனையை பொது பயன்பாட்டு ஆணைக்குழு நிராகரித்துள்ளது. நாட்டின் மின்சாரத் தேவையை கருத்திற்கொண்டு இந்த 55 மெகாவோட்ஸ் மின்சார கொள்வனவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுத்தருமாறு மின்சாரசபை, பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருந்தது. எனினும் இது நடைமுறைகளை மீறும் செயல் என்று பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது

Read More

கொழும்பில் மின் தடை!

கொழும்பு நகருக்கு மின் விநியோகத்தை வழங்கும் இரு மின் நிலையங்களின் இணைப்பில்  புதிதாக மாற்றம் செய்ய இருப்பதால் கொழும்பு நகரில் மின் தடை ஏற்படலாம் என மின்சார சபை ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுவரை காலமும் கொழும்பு நகருக்கு ஒரு இணைப்பின் ஊடாகவே மின்சாரம் வழங்கப்படுகின்றது. இந்த இணைப்பில் திருத்தம் மேற்கொள்ளும் போது மின் தடை ஏற்படலாம்  என மின்சார சபை ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்தார்.

Read More

மின்சார சபை தலைவரின் இராஜினாமா கடித்ததை ஏற்க மறுப்பு

மின்சார சபையின் தலைவர் தனது பதவியை இராஜினாமா செய்வதாக வழங்கிய கடிதத்தை உரிய அமைச்சர் ஏற்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு பூராகவும் ஏற்பட்ட மின்சாரத் தடையை பொறுப்பெற்று இலங்கை மின்சார சபையின் தலைவர் தனது பதவியை அநுர விஜயபால இராஜினாமா செய்வதாக அறிவித்தார். எனவே மின்சக்தி அமைச்சருக்கு குறித்த கடிதம் வழங்கிய போது அவர் அதனை மறுத்துள்ளார் தற்போது கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய, அந்த இராஜினாமா கடித்ததை ஏற்க மறுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Read More