Headlines

நாட்டில் மின்சாரம் அவ்வப்போது துண்டிக்கப்படும்: இலங்கை மின்சார சபை

நாடளாவிய ரீதியில் மின்சாரம் அவ்வப்போது துண்டிக்கப்படுமென இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது. இந்த மின்வெட்டானது  தொடர்ந்து வரும் சில நாட்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்படுமென மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது. நுரைச்சுாலை அனல் மின்நிலைய செயலிழப்பே இதற்கு காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

மின் தடைக்கு, மின்னலே காரணம்

பொல்பிட்டியவிலிருந்து கொலனாவை வரையிலான அதிவலுகொண்ட பிரதான மின் கட்டமைப்பை மின்னல் தாக்கியதன் காரணமாகவே நாடளாவிய ரீதியில் மின்சார தடை ஏற்பட்டதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் நேற்று (26) பிற்பகல் திடீரென மின் தடை ஏற்பட்டது. இதனால் பாவனையாளர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர். இயல்வு வாழ்க்கையில் ஸ்தம்பித நிலை ஏற்பட்டது. லக்‌ஷபான நீர் மின்னிலையத்திலிருந்து பொல்பிட்டிய உப மின்நிலையத்தினூடாக கொழும்புக்கு மின்வழங்கும் 33,000 வோல்ட் மின் தொகுதியில் மின்னல் தாக்கியதன் காரணமாகவே இம்மின்தடை ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை…

Read More

திருட்டு மின்­சாரம் தொடர்பில் நட­வ­டிக்கை

அம்­பாறை மாவட்­டத்தில் திருட்டு மின் ­சாரம் பெறுவோர் மீது இலங்­கை மின்சாரசபை சட்ட நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்­றது. சமீ­ப­கா­ல­மாக அம்­பாறை மாவட்­டத்தில் திருட்டு மின்­சாரம் பெறு­வோர் தொடர்பில் இலங்கை மின்­சார சபைக்கு முறைப்­பா­டுகள் கிடைக்கப் பெற்­றதன் ஊடாக அம்­பாறை மாவட்­டத்தில் பல பிர­தே­சங்­க­ளிலும் சட்­ட­வி­ரோ­த­மாக மின்­சாரம் பெறு­வோர்கள் சுற்றி வளைக்­கப்­பட்டு கைது செய்­யப்­பட்டு வரு­கின்­றனர். கொழும்­பி­லி­ருந்து வருகை தரும் விசேட மின்­சார சபை குழு­வினர், பிராந்­திய மின்­சார சபை ஊழி­யர்கள், பிர­தேச பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் ஆகியோர் இணைந்து…

Read More

2500 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

மனித வலு நிறுவனத்தினூடாக மின்சாரசபையில் சேவையாற்றும் 3700 பணியாளர்களில் 2500 பேருக்கு நிரந்த நியமனம் எதிர்வரும் 17ஆம் திகதி வழங்கப்படவுள்ளது என மின்வலு மற்றும் புதுப்பிக்கதக்க சக்தி அமைச்சர் நேற்று பாராளுமன்றில் தெரிவித்தார். இலங்கை மின்சாரசபையின் ஆட்சேர்ப்பு விதிமுறைகளுக்கமைய தகைமைகள் ஆராய்ந்து பார்த்த பின்னர் ஏனையோரும் இணைத்துக்கொள்ளப்படுவர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Read More