அரநாயக்கவில் ஐந்து சடலங்கள் மீட்பு
மாவனல்லை, அரநாயக்க பிரதேசத்தில் நேற்றிரவு (17) ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டவர்களின் ஐந்து சடலங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளது. நேற்றிரவு தொடர்ந்து பெய்த கடும் மழை காரணமாக அரநாயக்க பிரதேசத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட முடியாத நிலை தோன்றியிருந்தது. இன்று அதிகாலை ஐந்து மணி தொடக்கம் முப்படையினரும் பொலிசாரும் இணைந்து தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது மண்ணில் புதையுண்ட நிலையில் காணப்பட்ட ஐந்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று கேகாலை புளத்கொஹுப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவில்…
