Headlines

நவ்சர் பவுசிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

வர்த்தகர் ஒருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் நவ்சர் பவுசிக்கு எதிராக பொலிஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் குறித்த குற்றப் பத்திரிகை கொழும்பு பிரதம நீதவான் கிகான் பிலபிடிய முன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குருந்துவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக, நவ்சர் பவுசிக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணையை எதிர்வரும் மே மாதம் 30ம் திகதிக்கு மேற்கொள்ள நீதவான் தீர்மானித்துள்ளார்.

Read More

மரண அச்சுறுத்தல் குறித்து நான் அஞ்சப் போவதில்லை : சபாநாயகர்

– ப.பன்னீர்செல்வம்  – ஆர்.ராம் –  எனது  அரசியல் வாழ்க்கையில் எத்தனையோ  அச்சுறுத்தல்களை சந்தித்துள்ளேன்.  எனவே  எனக்கெதிராக மரண அச்சுறுத்தல் தொடர்பில்  நான் அஞ்சப் போவதில்லையென  சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று சபையில் தெரிவித்தார். ஜே.வி.பி. தலைவர் மற்றும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் எம்.பியுமான அநுர திஸாநாயக்க இன்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் ஒழுங்குப் பிரச்சினையொன்றைக்  கிளப்பினார். இதில் சபாநாயகருக்கு (உங்களுக்கு) தொலை பேசி மூலம் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது என்று நீங்கள் நேற்று புதன்கிழமை சபையில் வெளிப்படுத்திய…

Read More