Headlines

மழை நீடித்தால் மண்சரிவு அபாயம் அதிகரிக்கும்!

மழை நீடித்தால் மண்சரிவு அபாயமும் அதிகரிக்கும் என தேசிய கட்டிட ஆய்வு அமைப்பின் மண்சரிவு கண்காணிப்பு பிரிவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ். பண்டார தெரிவித்துள்ளார். சிங்களப் பத்திரிகையொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், எதிர்வரும் 24 மணித்தியாலத்தில் மழை தொடர்ந்தும் பெய்தால் நாட்டின் ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாயம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும். கண்டி, இரத்தினபுரி, கருணாகல், நுவரெலியா, கேகாலை, மாத்தளை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் இவ்வாறு…

Read More

220 பேர் தொடர்பில், இதுவரை தகவல் இல்லை

இயற்கைப் பேரனர்த்தத்தினால் இலட்சக்கணக்கான மக்கள் நிர்க்கதியாகியுள்ளதுடன் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதேவேளை, ஆகக்குறைந்தது 173 பேர் காணாமல் போயுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதேவேளை, 414,627 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த மத்திய நிலையம் அறிவித்துள்ளது. மலையகத்தில் மண்சரிவுகளும், தாழ்நிலப்பிரதேசங்களில் வெள்ளமும் சூழ்கொண்டுள்ளன. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றுமுழுதாகப் பாதிப்படைந்துள்ளது. இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மட்டுமன்றி, அவர்களின் உறவினர்கள் மற்றும் துயர்பகிரச் செல்வோரும் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். பாரிய அழிவுகளை ஏற்படுத்திய…

Read More

கண்டி – அம்பலமான தோட்டப் பகுதியில் மண்சரிவு அபாயம்

கண்டி, கலஹா பிரதேசத்தில் அம்பலமான பெருந்தோட்டப் பகுதியில் திரிவானா கற்பாறையுள்ள பகுதியில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக கண்டி  மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Read More

அரநாயக்க பாரிய மண்சரிவு! 134 பேர் புதையுண்டுள்ளதாக அச்சம்?

மாவனல்ல அரநாயக்க மண்சரிவில் 134 பேர் இன்னும் மண்ணில் புதையுண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பாரிய மண் சரிவு அனர்த்தத்தில் புதையுண்ட 14 சடலங்கைள மீட்புப் பணியாளர்கள் மீட்டுள்ளனர். எனினும் இன்னும் 134 பேர் காணாமல் போயுள்ளதாக மீட்புப் பணிகளுக்குப் பொறுப்பான மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். அரநாயக்க, எலங்கபிட்டிய சாமசர மலை இவ்வாறு மண்சரிவினால் பாதிக்கப்பட்டது. மலையடிவார கிராமங்களில் காணப்பட்ட சுமார் 350க்கும் மேற்பட்ட வீடுகள் மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளது. மலையின் நூறு ஏக்கர் பகுதி சுமார்…

Read More

கடுகண்ணாவை மண்சரிவில் காணாமல்போனோரின் பெயர் விபரம்

கடுகண்ணாவை, இலுக்வத்தைப் பிரதேசத்தில் இடம் பெற்ற மண் சரிவில் பின்வருவோர் காணாமல்போனதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டள்ளது. கடுகண்ணாவை பிரதேசத்திலுள்ள ரம்மலக, வட்டப்பொல என்ற இடத்திலுள்ள 104, மற்றும் 103 ஆம் இலக்க வீடுகள் இரண்டும் மண்ணில் புதையுண்டாதகவும் அப்போது 104ஆம் இலக்க வீட்டிலிருந்தவர்களான சபீனா பேகம் (42 வயது), மொகமட் சியான் (08 வயது), மொகமட் சபீக்(15 வயது) ஆகியோரும் 103 ஆம் இலக்க வீட்டிலிருந்த மும்தாஸ் பேகம் (49 வயது), மொகமட் ரஸ்மீன்( 25வயது), மொகமட்…

Read More

அரநாயக்கவில் ஐந்து சடலங்கள் மீட்பு

மாவனல்லை, அரநாயக்க பிரதேசத்தில் நேற்றிரவு (17) ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டவர்களின் ஐந்து சடலங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளது. நேற்றிரவு தொடர்ந்து பெய்த கடும் மழை காரணமாக அரநாயக்க பிரதேசத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட முடியாத நிலை தோன்றியிருந்தது. இன்று அதிகாலை ஐந்து மணி தொடக்கம் முப்படையினரும் பொலிசாரும் இணைந்து தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது மண்ணில் புதையுண்ட நிலையில் காணப்பட்ட ஐந்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று கேகாலை புளத்கொஹுப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவில்…

Read More

கடுகண்ணாவ மண் சரிவு: தாயும் மகனும் ஜனாஸாவாக மீட்பு

கண்டி, கடுகண்ணாவ, இழுக்வத்தை பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி மண்ணுக்குள் புதையுண்டு காணாமல் போன இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 15 வயதுடைய சிறுவனின் சடலமும் தாயொருவரின் சடலமும் இவ்வாறு மீட்கப்பட்டதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. ஏனைய நால்வரையும் தேடும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. கண்டி, கடுகண்ணாவ, இழுக்வத்தை பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் 06 பேர் மண்ணுக்குள் புதையுண்டு காணாமல் போயிருந்தனர்.

Read More

கடுகண்ணாவையில் மண் சரிவு: ஆறு முஸ்லிம்களை காணவில்லை

– ijas Ahmed – கடுகண்ணாவை இலுக்குவத்தை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் அப்பிரதேசத்தில் 3 முஸ்லிம் குடும்பங்கள் வாழும் வீடுகள் மண்னில் புதைந்து 6 பேர் காணாமல் போயுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். ரம்மக்கல தக்கியா பள்ளிவாயலுக்கு முன்னால் அமைந்துள்ள இவ்வீடுகள் தொடர் மழையால் நேற்று (16) இரவு மண் சரிவில் சிக்கியுள்ளது. இராணுவம் உற்பட மீட்பு படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆம்புலன்ஸ் சேவைகள் குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தும்  இதுவரை…

Read More