Headlines

உயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹெய்ட்ரீ தோட்டத்தில் சிறுத்தை புலி ஒன்று உயிரிழந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. 4அடி நீளமும் 3 அடி உயரமும் கொண்ட குறித்த சிறுத்தை புலி வலையில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சிறுத்தை புலியை நல்லதண்ணி வன ஜீவராசி அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக  வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

இரு பொலிஸார் மீது அசிட் வீச்சு

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேகநபரைக் கைது செய்வதற்கு சென்ற பொலிஸார் இருவர் மீது அசிட்  தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் ஒன்று வீரகெடிய பகுதியில் இடம்பெற்றுள்ளது. வலஸ்முல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாஜன்ட் மற்றும் கான்ஸ்டபில் ஒருவருமே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். பிடியாணையுடன் சந்தேக நபரைக் கைது செய்ய அவரது வீட்டுக்குச் சென்ற வேளை, சந்தேக நபர் தனது மகனுடன் இணைந்து குறித்த இருவர் மீதும் அவர் தாக்க முற்பட்டுள்ளார். அதனைத் தடுக்க இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் முற்பட்ட வேளை, அங்கு…

Read More

பொலிஸ் வேடத்தில் பணம் கொள்ளை!

இருவேறு சம்பவங்களில் 8 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸார் என்று தங்களை கூறிக்கொண்டு வந்த இருவர், மீன் வியாபாரியை அச்சுறுத்தி அவரிடமிருந்து 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை அபகரித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் இன்று அதிகாலை கொஸ்கமவில் இடம்பெற்றுள்ளது. இதேவேளை, ரத்கமவில் உள்ள மதுபானசாலையொன்றுக்கு நேற்று(16) இரவு மோட்டார் சைக்கிளில் வந்திருந்த இருவர், மதுபான சாலையின் முகாமையாளருக்கு கத்தியை காண்பித்து அச்சுறுத்தி 5 இலட்சம் ரூபாய் அவரிடமிருந்து பணத்தை…

Read More

எம்பிலிப்பிட்டிய விவகாரம்: ஏ.எஸ்.பி கைது

எம்பிலிப்பிட்டியவில் 29 வயதான இளைஞன், படுகொலைச்செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (ஏ.எஸ்.பி) கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் அறிவித்தனர்.   இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் சந்தேகநபர்களை கைதுசெய்யுமாறு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டு ஆறு நாட்களுக்கு பின்னரே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Read More

20 அடி பள்ளத்தில் பாய்ந்து லொறி விபத்து

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட கொழும்பு ஹட்டன் பிரதான வீதியில் குயில்வத்த பகுதியில் லொரி ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் காயங்களுக்கானதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர். ரொசாலை பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி வந்த லொரியின் சுக்கான் திடீரென இயங்காத நிலையில் சாரதி கட்டுபாட்டை இழந்து லொரி பாதையை விட்டு விலகி 20 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துகுள்ளானதில் சாரதி உட்பட மேலுமொருவராக இரண்டு பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். மேலும், காயங்களுக்குள்ளான இருவரும் வட்டவளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இந்த…

Read More

ஏ.ஸ்.பி. யின் மனைவியின் காருடன் மோதிய பொலிஸாரின் மோட்டார் சைக்கிள்

போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று பிரதி பொலிஸ் அத்தியட்சகரின் மனைவி செலுத்தி வந்த காருடன் மோதி விபத்துக்குள்ளான  சம்பவம் நேற்று கொழும்பு பிலிப் குணவர்தன பகுதியில் இடம்பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் சபை தேர்தலில் திலங்க சுமதிபாலவுக்கு ஆதரவு வழங்குவதற்காக காரில் சென்ற பொலிஸ் அத்தியட்சகரின் மனைவியின் வாகனத்திலேயே, 100கிலோ மீற்றர் வேகத்தில் வந்த பொலிஸ் அதிகாரிகளின் மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. குறித்தப் பெண் தனது வாகனத்தை நிறுத்தி வைப்பதற்காக சினமன்…

Read More