Headlines

போதையற்ற குடும்பம் உருவாக வேண்டும் – ஜனாதிபதி

போதைபொருள் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தல் தொடர்பாக பொலிஸார் தினமும் தனியாக பல மணித்தியாலங்களை ஒதுக்கி நேரடிப் பங்களிப்பை வழங்க வேண்டுமென தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,போதையிலிருந்து மீட்டு சுதந்திரமான நாட்டை உருவாக்கி போதையற்ற குடும்பம் உருவாக வேண்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். போதையிலிருந்து சுதந்திரம் பெற்ற நாடு என்ற தொனிப் பொருளிலான தேசிய போதைபொருள் தடுப்பு வேலைத்திட்டத்தின் 5 ஆம் கட்டம் குருநாகலையை மையப்படுத்தி மாளிகாபிட்டிய மைதானத்தில் ஜனாதிபதியால் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது உரையாற்றுகையிலேயே…

Read More

நவ்சர் பவுசிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

வர்த்தகர் ஒருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் நவ்சர் பவுசிக்கு எதிராக பொலிஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் குறித்த குற்றப் பத்திரிகை கொழும்பு பிரதம நீதவான் கிகான் பிலபிடிய முன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குருந்துவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக, நவ்சர் பவுசிக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணையை எதிர்வரும் மே மாதம் 30ம் திகதிக்கு மேற்கொள்ள நீதவான் தீர்மானித்துள்ளார்.

Read More

கல் கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து மாணவனின் சடலம் மீட்பு

திருகோணமலை – சம்பூர் 7 கிராமத்திலுள்ள கிணற்றில் கல்லொன்றுடன் கட்டப்பட்ட நிலையில் மாணவனொருனின் சடலம் இன்று (26) காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் 6 வயதுடைய மாணவனுடையது என ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில்  சம்பூர்  பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Read More

கைவிலங்குடன் தப்பி சென்றவர் மடக்கிப்பிடிப்பு

பொலிஸாரின் பாதுகாப்பிலிருந்து கைவிலங்குடன் தப்பிச் சென்ற கைதி ஒருவரை கலஹா நகரில் வைத்து கலஹா பொலிஸார் கைது செய்துள்ளனர். போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கம்பளை பொலிஸார் கட்டுகஸ்தோட்டை வத்துவல பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயது நபர் ஒருவரை கைது செய்து கைவிலங்கிட்டிருந்தனர். இந்நிலையில் சந்தேக நபர் திடீரென தலைமறைவாகியுள்ளார். இது குறித்து சகல பொலிஸ் நிலையங்களுக்கும் தகவல் வழங்கப்பட்டிருந்தது. சந்தேக நபர் கைவிலங்குடன் வாகனம் ஒன்றினை கலஹா நகரின் ஊடாக செலுத்திச் சென்ற…

Read More

பொலிஸ் கெப் புகையிரதத்தில் மோதி விபத்து

அம்பலங்கொட – கெபு ஹெல பகுதியில் இன்று அதிகாலை பாதுகாப்பற்ற புகையிரத கடவையை, கடக்க முற்பட்ட பொலிஸ் கெப் ரக வாகனம், புகையிரதத்தில் மோதுண்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. புகையிரத கடவையை கடக்க முற்பட்ட போது வாகனத்தின் இயந்திரம் செயல் இழந்துள்ளது. பிறகு அதில் இருந்த பொலிஸார் இறங்கியுள்ளனர். பின்னரே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More