Headlines

கைதிகளுக்கு பொதுமன்னிப்பு!

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர். பௌத்தர்களின் பிரதான சமய விழாக்களில் ஒன்றான வெசாக் பௌர்ணமி தினத்தை ஒட்டி, பொது மன்னிப்பு அடிப்படையில் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர். சுமார் 500 கைதிகள் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. சிறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு அபராதம் செலுத்த முடியாது தண்டனை அனுபவிப்போர் வயது முதிர்ந்த கைதிகள் உள்ளிட்டவர்கள் இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளனர்.

Read More

பொதுமன்னிப்புக் காலம் சிறந்த பெறுபேறுகளை எட்டியுள்ளது!

இவ்வாரம் முதல் ஆரம்பமான சட்டவிரோத ஆயுதங்களை உரிய முறையில் அரசாங்கத்திடம் கையளிப்பதற்கான பொது மன்னிப்பு காலம் சிறந்த பெறுபேறுகளை அடைந்துள்ளது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார். எதிர்வரும் மே மாதம் 06ஆம் திகதி முடிவடையவுள்ள இப்பொது மன்னிப்புக் காலப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் தம் வசம் வைத்திருக்கும் ஆயுதங்களை அண்மையிலுள்ள பொலிஸ் நிலையம், பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலகத்தில் கையளிக்க முடியும். இந்த பொது மன்னிப்பு காலப்பகுதிக்குள் சட்டவிரோத ஆயுதங்களை கையளிப்பவர்களுக்கு தண்டனை…

Read More