புத்தளம் முஹாஜிரீன் அரபுக்கல்லூரியின் முப்பெரும் விழா!
-சுஐப் – புத்தளத்திலே சிறந்து விளங்கும் அரபுக்கல்லூரிகளிலே குல்லியத்துல் முஹாஜிரீன் அரபுக்கல்லூரி சிறப்பானதாகும். இக்கல்லூரியின் வளர்ச்சி மிகத்துரிதமானதாகும். 2004 ஆம் ஆண்டிலே 10 மாணவர்களுடன் ஓர் ஓலைப்பள்ளியாக இக்கல்லூரி தில்லையடியில் ஆரம்பிக்கப்பட்டது. பரோபகாரிகளின் உதவியினால் இந்தக்கல்லூரி இன்று புத்தளத்திலே சிறப்பாக இயங்கி வருகின்றது. இதன் துரித வளர்ச்சிக்கு காரணகர்த்தாவாக விளங்குபவர் கல்லூரியின் ஸ்தாபகப்பணிபாளர் மௌலவி ஷாஹுல் ஹமீது அஷ்ரப் முபாரக் ரஷாதி அவர்களாகும். இந்தக்கல்லூரியை தரமான ஒரு கல்லூரியாக அமைப்பதற்கு அவர் மேற்கொண்டுவரும் முயற்சி மிகவும் மெச்சத்தக்கதாகும்….
