Headlines

எரிபொருள் விலை தொடர்பில் பேச்சு : பிரதமர்

எரிபொருள் விலை தொடர்பில் திறைசேரி மற்றும் ஏனைய தரப்பினருடன் பேச்சு நடத்த நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவிக்கவிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றில், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோதே அவர் இவ்வாறு குறி்ப்பிட்டுள்ளார். உலக பொருளாதார நிலை, எமது பொருளாதாரத் திட்டங்கள் என்பவற்றைக் கருத்தில் கொண்டே இது தொடர்பில் ஆராய வேண்டுமென குறிப்பிட்ட அவர் எரிபொருள் விலை தொடர்பில் இரண்டு நாட்கள் விவாதம் நடத்தவுள்ளதாகவும்…

Read More

ஒற்றையாட்சி மாறாது; பிரதமர்

புதிய அர­சி­ய­ல­மைப்­பினை 21 ஆம் நூற்­றாண்­டுக்கு ஏற்றால் போல் தயா­ரிக்க உள்ளோம். இதன்­போது மக்­களின் கருத்­துக்­க­ளுக்கே பெரும் முக்­கி­யத்­துவம் அளித்து செயற்­ப­டுவோம். நான் ஒரு இலங்­கை­யன். இந்த நாட்டை பிள­வு­ப­டுத்­து­வ­தற்கு ஒரு போதும் இட­ம­ளிக்கமாட்டேன் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். நாட்டில் வாழும் அனைத்து இனத்­த­வர்­க­ளையும் ஒன்­றி­ணைத்து ஐக்­கி­யத்தை ஏற்­ப­டுத்­து­வதற்கு எனக்கு இட­ம­ளி­யுங்கள். ஒற்­றை­யாட்­சிக்கு முர­ணான அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கமாட்டோம். மக்­களை குழப் பும் வகையில் வீணான எதிர்ப்­பு­களை உட­ன­டி­யாக கைவி­டு­மா­று­ கோ­ரு­கின்றேன். உலக வர­லாற் றில் முதல்…

Read More

வெளிவிவகார செயலர் நாளை இலங்கை வருகை

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலர் ஜெயசங்கர் நாளை இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார். அவர் இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சித்திராங்கனி வாகீஸ்வரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உட்பட பல முக்கிய அதிகாரிகளை சந்திக்கவுள்ளார்.

Read More

இலங்கை பொருளாதார மாநாடு 2016

இலங்கை பொருளாதார மாநாடு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாடு எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இந்த பொருளாதார மாநாட்டில் சர்வதேச மட்டத்திலான முதலீட்டாளர்கள், பொருளியல் துறையில் நோபல் பரிசு வென்ற கலாநிதி ஜோசப் ஸ்டீல்கிலிட்ஸ் உள்ளிட்ட புத்திஜீவிகள் கலந்து கொள்ளவுள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வலய நாடுகளிடையேயான அபிவிருத்தி, போட்டித்தன்மை மற்றும் பொருளாதார ரீதியில் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் எதிர்நோக்கும் சவால்கள்…

Read More

இலங்கை மனித உரிமை ஆணைக்குழு ஜனாதிபதிக்கு கடிதம்

இலங்கையில் அமுல்படுத்த திட்டமிட்டுள்ள மரண தண்டனையை நீக்குமாறு பல யோசனைகளை முன்வைத்து கடிதம் ஒன்றினை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிடம் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு நேற்று (4) சமர்ப்பித்துள்ளது. மனித உரிமையின் அடிப்படையில் மரணத்தண்டனை கொடூரமானதாகும் மனிதாபிமானமற்றதாகும். ஆகவே மனித சமூதாயத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் இலங்கை செயல்பட வேண்டும் என அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தின் பிரதிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபாநாயகர் கரு ஜயசூரிய எதிர்கட்சித் தலைவர் சம்பந்தன் மற்றும் நீதி…

Read More

பொதுவான ஓய்வூதியத் திட்டமொன்றை அறிமுகப்படுத்துவோம்

– ப.பன்னீர்செல்வம் – ஆர்.ராம் –  அரச ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்தை இரத்து   செய்வதற்கோ அல்லது அதில் மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பிலோ எதுவிதமான  தீர்மானத்தையும் அரசு மேற்கொள்ளவில்லையென இன்று  சபையில் உறுதியளித்த  பிரதமர் ரணில்  விக்கிரமசிங்க எதிர்காலத்தில்  அரச தனியார் துறையினருக்கு பொதுவான  ஓய்வூதியத் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்படுமென்றும் பிரதமர் தெரிவித்தார்.  பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை விசேட  உரையொன்றை ஆற்றும்- போதே பிரதமர் ரணில்  விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

Read More