Headlines

ரணில் தலைமையில் உயர்மட்ட குழு மே மாதம் இந்தியா பயணம்.!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான உயர்மட்ட குழு எதிர்வரும் மே மாதம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளது. இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக இந்தியா செல்லும் அரசாங்கத்தின் உயர் மட்ட குழுவில் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவும் இடம்பெறுகின்றார். துறைமுக நகர் விவகாரம் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சீன விஜயத்தின் பின்னரான சூழ்நிலை என்பவை இந்த விஜயத்தில் முக்கிய விடயங்களாக இந்தியா கவனத்தில் கொள்ளவுள்ளது. கடன்களுக்காக பங்குகளை விற்பணை செய்வதற்கான…

Read More

முஸ்லிம் நாடுகளுடன் ரணில் ஒப்பந்தம்

சீன விஜயத்தின்போது பெற்றுக்கொண்ட பொருளாதார உபாயங்களை, இரண்டு தசாப்த காலத்துக்குப் பயன்படுத்த இணக்கம் காணப்பட்டது எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கிடைத்த நன்கொடை,  நான்கு துறைகளின் மேம்பாட்டுக்காகப் பயன்படுத்தப்படும் என்றார். நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், புதிய அரசியலமைப்பை உருவாக்குதல், நாடாளுமன்றத்தைப் பலப்படுத்தல், ஊழல் இல்லாத நாட்டை உருவாக்குதல், அபிவிருத்தி நோக்கிப் பயணித்தல் ஆகியவற்றை பிரதான கருப்பொருட்களாகக் கொண்டே அரசாங்கம் பயணிக்கின்றது என்றும் அவர் சொன்னார். சீன விஜயத்தை முடித்துக்கொண்டு நாடுதிரும்பிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அலரிமாளிகையில் நடத்திய…

Read More

சீனாவை சென்றடைந்தார் பிரதமர்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனாவை சென்றடைந்துள்ளதாக பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் நேற்று சீனாவிற்கு புறப்பட்டுச் சென்றிருந்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கை சென்றடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சீன வெளிவிவகார துணை அமைச்சர் கொங் சூவான் யூ மற்றும் சீனாவிற்கான இலங்கை தூதுவர் கலாநிதி கருணாசேன கொடிதுவக்கு ஆகியோர், பிரதமர் ரணில் விக்ரமசிங்க  மற்றும் அவரது பாரியார் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோரை பெய்ஜிங் கெப்பிட்டல் சர்வதேச விமான…

Read More

பிரதமர் சீனா பயணமானார்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பகல் 1.30 மணிக்கு  சீனாவுக்கு விஜயமானார். சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இவர் அங்கு செல்கிறார். இவருடன் 15 தூதுவர்களும் பயணமாகினர். இலங்கை விமானச்சேவைக்கு சொந்தமான  UL 868 இல் 5 நாள் உத்தியோகபூர்வ  விஜயத்தை மேற்கொண்டுள்ளனர் . இவ்விஜயத்தின் போது  பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீன ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அந்த நாட்டின் முக்கிய பிரமுகர்களுடன் இணைந்து கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளதோடு, இரு நாடுகளுக்கும் இடையில் பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

மின்சாரக்கதிரை என்ற சொல் இன்று அகராதியிலிருந்து நீங்கிச் சென்றுள்ளது

மக்களின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு அர்ப்பணித்த ஒரு அரசாங்கம் என்ற வகையில் இன்று இலங்கை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு உட்பட உலகின் சகல நாடுகளினதும் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதுடன், அந்த அங்கீகாரத்தின் மூலம் பல வருடங்களாக இந்த நாட்டு மக்களும் அரசியல்வாதிகளும் ஊடகவியலாளர்களும் பேசிவந்த மின்சாரக்கதிரை என்ற சொல் அகராதியிலிருந்து நீங்கிச் சென்றுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் (28) நாரம்மலை மயுரபாத மத்திய கல்லூரியின் பரிசளிப்பு விழாவில் பிரதம…

Read More

புதிய கல்விக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்படும்! பிரதமர்

நாட்டில் நீண்டகால கல்வித் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார். இதேவேளை நாட்டில் தற்போது காணப்படும் கல்வித் திட்டங்களில் துரிதமான மாற்றத்தை கொண்டுவர எதிர்பார்த்திருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு ரோயல் கல்லூரியில் நேற்று (28) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்ட போதே பிரதமர் இது தொடர்பாக தெரிவித்துள்ளார். மேலும் நாட்டின் சிறந்த தலைவர்கள் உருவாவதற்கு காரணமாக அமைவது கல்வியாகும். இந்த கல்வியை மேம்படுத்த புதிய கொள்ளைகள் வகுக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் பிரதமர்…

Read More

ஒன்லைன் மூலம் தெரிவியுங்கள்

நல்லிணக்க பங்காளர்கள், நிபுணர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோரின் நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கருத்துக்களை ஒன்லைனில் சமர்பிப்பதற்காக நல்லிணக்க பொறிமுறைகளுக்கான ஆலோசனை வழங்கும் விஷேட செயலணி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளது. காணாமற் போனோர் அலுவலகம், உண்மை, நீதி, நல்லிணக்கம் மற்றும் மீள்-நிகழாமைக்கான ஆணைக்குழு, சட்டப் பொறிமுறைகள், இழப்பீட்டிற்கான அலுவலகம் என்பனவற்றை உள்ளடக்கியதாக நல்லிணக்க பொறிமுறைகளை அமைப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், கருத்துக்களை சமர்ப்பிக்க்கும் வகையில் இவ் ஆலோசனை கோரல் செயன்முறை இணையத்தளத்திற்கான சமர்ப்பணப் படிவத்தினை மும்மொழிகளிலும்…

Read More

அவசரமாகக் கூடுகிறது பொருளாதாரக் குழு!

அரசாங்கத்தின் பொருளாதாரக் குழு அவசரமாக இன்று (16) கூடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர்  ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு மின்வலு அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் பொருளாதாரக் குழுவில் மின்வலு அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோர் அங்கம் வகிக்காத  நிலையிலும், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மின்தடை உள்ளிட்ட நெருக்கடிகள் குறித்து ஆராயும் நோக்கில், மின்வலு அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோருக்கும்  பொருளாதாரக் குழு அழைப்பு…

Read More

2019இல் புதிய கல்வி முறை: பிரதமர்

கல்வித் துறையை மேம்படுத்த வேண்டுமாயின், பயிற்றப்பட்ட ஆசிரியர்களை பாடசாலைகளுக்குக் கொடுக்கவேண்டும் எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 2019இல் புதிய கல்வி முறைமையை ஏற்படுத்துவதற்கு முயற்சிப்போம் என்றும் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில், நேற்று புதன்கிழமை (09) பிரதமரிடம் கேள்விகளைக் கேட்பதற்கான நேரத்தின்போது, எட்வட் குணசேகர எம்.பி கேட்டிருந்த கல்வி முறையில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் தொடர்பிலான கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பிரதமர் தொடர்ந்து பதிலளிக்கையில், கடந்த காலத்தில், பாடசாலைகளுக்கோ, இன்றேல் மாணவர்களுக்கோ, தேவைக்கேற்ப ஆசிரியர்கள்…

Read More

வெளிநாட்டு வாழ் இலங்கையரின் கருத்துக்கணிப்புக்கு அனுமதி

– எஸ்.ரவிசான் – தேசிய அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்படவுள்ள  புதிய அரசியலமைப்புக்கு வெளிநாட்டு வாழ் இலங்கையர்களின் கருத்துக்கள் உட்பட யோசனைகளை பெறுவதற்கு  பிரதமர் அலுவலகம் அனுமதி வழங்கியுள்ளதாக அரசியலமைப்பு தொடர்பான மக்கள் கருத்தறியும் குழு தெரிவித்தது. வெளிநாட்டு வாழ் இலங்கையரின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளை காணொளி அழைப்பு மூலமாக பெற்றுகொள்வதற்கு போதுமான வசதி எம்மிடம் காணப்படாத நிலையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்ட பின்னர் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும்  அந்த குழு குறிப்பிட்டுள்ளது.

Read More

இலங்கை வரவுள்ள நியூஸிலாந்துப் பிரதமர்

நியூஸிலாந்துப் பிரதமர் ஜோன் கீ  இரு நாடுகளுக்கும் இடையில் வளர்ந்து வரும் வர்த்தக மற்றும் அரசியல் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்குடன் அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இலங்கை வரும் ஜோன் கீ, ஜனாதிபதி, பிரதமரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதோடு, உள்ளூரிலுள்ள வர்த்தகர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இவர் கடந்த 2013ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கை வந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

பிரதமரின் கருத்துக்கு மஹிந்த வருத்தம்

ஊடகவியலாளர்கள் பற்றி பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தில் நேற்று (28) தெரிவித்த கருத்து தொடர்பில் வருத்தமடைவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் ஊடகவியலாளர்களுக்கு சுதந்திரம் வழங்கப்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாரிய இலஞ்ச ஊழல்களை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் இன்று காலை ஆஜராகினார். அதன்போது ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார். ஜனாதிபதி தேர்தலின்போது சுயாதீன தொலைக்காட்சி சேவையில் பிரசாரம் செய்ததுக்கான பணத்தை வழங்காமல் மோசடி செய்யதாகக் கூறப்படும்…

Read More