Headlines

மன்னாரில் கண்டன பேரணி

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக இடம்பெறும் பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் மற்றும் படுகொலைகளைத் தடுத்து நிறுத்தக் கோரி இன்று காலை மன்னாரில் கண்டன பேரணி இடம் பெற்றுள்ளது. மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவி குருசாந்தன் மஹாலட்சுமி தலைமையில் குறித்த கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்தில் இருந்து இன்று (29) காலை 10 மணிக்கு ஆரம்பமான குறித்த பேரணி பிரதான வீதியூடாக சென்று மன்னார் பஸார் பகுதியை சென்றடைந்தது. பின்னர்…

Read More

பாலியல் வன்முறைகளை ஒழிக்கும் பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்து

போரின் போது பாலியல் வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வரும் பிரகடனத்தை இலங்கை நேற்று(12) கைச்சாத்திட்டுள்ளது. 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் 25ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் நியூயோர்க் தலைமையகத்தில் 122 நாடுகள் இந்த பிரகடனத்தை ஏற்றுக்கொண்டன. இந்த நிலையில் குறித்த பிரகடனத்தை நேற்று 155 நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கையின் வெளிவிவகார அமைச்சு, இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாத்தல், பாலியல் வன்முறைகளை தடுத்தல் போன்ற விடயங்களில் இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்று…

Read More