Headlines

எனக்கு ஞாபகமே இல்லை: துமிந்த

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர கொலையோ, 2011ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 08ஆம் திகதியன்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலோ, தனக்கு எதுவுமே ஞாபகத்தில் இல்லை என்று தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, இந்த வழக்கிலிருந்த தன்னை முழுமையாக விடுதலை செய்யுமாறும் கோரிநின்றார். பிரதிவாதிக் கூண்டிலிருந்து வாய்வழியான சமர்ப்புகளை முன்வைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More

பாரத லக்ஸ்மன் கொலை : சந்தேகநபர்களுக்கு பலத்த பாதுகாப்பு

கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர உட்பட நால்வரை, கொலன்னாவையில் வைத்துச் சுட்டுக் கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்  வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபர்கள் இருவருக்கும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேற்படி கொலையின் பிரதான சந்தேகநபரான தெமட்டகொடை சமிந்த என்பவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கட்டணம் செலுத்தும் அறையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றார். மேற்படி கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்காக சிறைச்சாலை வாகனத்தில்…

Read More