Headlines

பாடசாலை சேவை வாகனங்களில் பிரேக்கில் குறைபாடுகள்

– திலக்கரத்ண திஸாநாயக்க – பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் 32 வான்கள் மற்றும் பஸ்களின் வாகன நிறுத்தும் கருவியில் (பிரேக்) குறைப்பாடுகள் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. கம்பஹா மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது சுமார் 100 வாகனங்கள் இவ்வாறு வாகன நிறுத்தும் கருவிகளில் குறைபாடுகளுடன் இயங்கி வந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றுள் அநேகமான வாகனங்கள் பாடசாலை மாணவர்களுக்கான சேவையில் ஈடுபடும் வாகனங்கள் என்றும் இவையனைத்தும் கம்பஹா மாவட்டத்துக்குள் இயங்குபவை என்றும்…

Read More

கிழக்குப் பாடசாலைகள் 12.00 மணியுடன் பூட்டு!

கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள பாடசாலைகள் அனைத்தும் பகல் 12.00 மணியுடன் நிறைவடையுமென கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.நிஸாம் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக சகல அரச பாடசாலைகளையும் இன்று முதல் (03) எதிர்வரும் வெள்ளிக்கிழமை (06) வரை காலை 7.30 தொடக்கம் பகல் 12.00 மணிவரை பாடசாலையை நடாத்துமாறு கல்வி அமைச்சு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Read More

2019இல் புதிய கல்வி முறை: பிரதமர்

கல்வித் துறையை மேம்படுத்த வேண்டுமாயின், பயிற்றப்பட்ட ஆசிரியர்களை பாடசாலைகளுக்குக் கொடுக்கவேண்டும் எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 2019இல் புதிய கல்வி முறைமையை ஏற்படுத்துவதற்கு முயற்சிப்போம் என்றும் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில், நேற்று புதன்கிழமை (09) பிரதமரிடம் கேள்விகளைக் கேட்பதற்கான நேரத்தின்போது, எட்வட் குணசேகர எம்.பி கேட்டிருந்த கல்வி முறையில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் தொடர்பிலான கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பிரதமர் தொடர்ந்து பதிலளிக்கையில், கடந்த காலத்தில், பாடசாலைகளுக்கோ, இன்றேல் மாணவர்களுக்கோ, தேவைக்கேற்ப ஆசிரியர்கள்…

Read More

2,700 பாடசாலைகளில் இணையத்தள இணைப்புகள் துண்டிப்பு

இணையத்தள கட்டணங்கள் செலுத்தப்படாமையினால் நாடெங்கிலுமுள்ள சுமார் 2700 பாடசாலைகளில் இணையத்தளத் தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது பாடசாலை மாணவர்களுக்கான ‘ஸ்கூல் நெட்’ எனப்படும் சேவையினை கடந்த அரசாங்கம் அறிமுகப்படுத்தியிருந்தது. இதனடிப்படையில் நாடெங்கிலுமுள்ள அரச பாடசாலைகளுக்கு இலவச இணையத்தள வசதியினை வழங்கியிருந்தது. மேலும் இணையத்தள வசதிக்காக ஒவ்வொரு பாடசாலையும் மாதாந்தம் 7 ஆயிரம் ரூபா முதல் 9 ஆயிரம் ரூபா வரை…

Read More

உணவு விசமானதால் 20 மாணவர்கள் வைத்தியசாலையில்

காலை உணவு விசமானதால்  20 மாணவர்கள் மினுவங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று(15) காலை பலபோவ கனிஷ்ட வித்தியாலயத்தில் வழங்கப்பட்ட காலை உணவே இவ்வாறு விசமடைந்ததாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. 8 மற்றும் 9 வயதான மாணவர்கள் காலை உணவை உட்கொண்ட பின் அவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டதால் , அவர்கள் மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Read More

சீருடை வவுச்சர்கள் பெப்ரவரி வரை செல்லுபடியாகும் :கல்வியமைச்சு

இவ்வாண்டுக்காக வழங்கப்பட்ட சீருடை வவுச்சர்கள் பெப்பரவரி மாதமும் செல்லுபடியாகும் என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது. குறித்த சீருடை வவுச்சர்களை பயன்படுத்தி பாடசாலை சீருடைகளை பெற்றுக்கொள்வது ஜனவரி மாதம் 31ஆம் திகதி மட்டுமே செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பெப்ரவரி மாதம் இறுதி வரை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை இவ்வவுச்சர்களை பயன்படுத்தி சீருடைகளை பெற்றுக்கொள்ளாதவர்களும் மேலுமொரு சந்தர்ப்பத்தை வழங்கும் நோக்கில் வவுச்சர் செல்லுபடியாகும் காலத்தை நிட்டிக்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஆலோசனை வழங்கியுள்ளார்.

Read More

பேனாவால் குத்திய ஆசிரியர் : வைத்தியசாலையில் மாணவன்

 – கிஷாந்தன் – லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை நகரத்தை அண்மித்த தரம் 01 முதல் 05 வரையான பாடசாலை ஒன்றில் கணித ஆசிரியர் ஒருவர் தனது வகுப்பில் உள்ள மாணவன் ஒருவனை பேனாவால் தலையில் குத்தியதால் மாணவன் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு எதிராக மாணவனின் பெற்றோர்  லிந்துலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர். 4 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 9 வயதுடைய மாணவன் ஒருவனே லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் நுவரெலிய…

Read More

வகுப்­ப­றை­களில் தொலை­பே­சி பாவ­னைக்குத் தடை

கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தமது கடமை நேரத்தில் வகுப்பறைகளில் கையடக்கத் தொலைபேசிகளைப் பாவிக்கக் கூடாதென்று கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிசாம், சகல வலையக் கல்விப் பணிப்பாளர்கள் மூலமாக, பாடசாலை அதிபர்களுக்கு அறிவித்துள்ளார். கடந்த காலங்களில் ஆசிரியர்கள் தமது கடமை நேரங்களில் வகுப்பறைகளில் வைத்து கையடக்கத் தொலைபேசிகளை பாவித்தமை மூலம் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும், மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாகவும் பெற்றோர்களிடம் இருந்து வந்த முறைப்பாடுகளை கவனத்திற் கொண்டு, கண்டிப்பான உத்தரவை கிழக்கு…

Read More

உங்கள் பிள்ளைகளை பாடசாலையில், அனுமதிக்க பணம் கேட்கிறார்களா..?

தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் போது பணம் அல்லது நன்கொடை தருமாறு பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்களென யாராவது கேட்டால் அது தொடர்பில் தமக்கு அறிவிக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. பணம் அல்லது நன்கொடை ஆகியவற்றின் ஊடாக பெற்றோரிடம் இலஞ்சம் வாங்கும் சகலருக்கும் எதிராக தமது சங்கம், நீதிமன்ற நடவடிக்கை எடுக்கும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பில்,  எந்தவொரு பெற்றோரும் 0112458058 – (call us) என்றத் தொலைபேசி…

Read More

விசமிகள் போட்ட புதிய பூட்டினால் ஆர்ப்பாட்டம்

– ஜவ்பர்கான் – மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடி பாத்திமா பாலிகா வித்தியாலத்தில் இன்று முதலாம் ஆண்டிற்கான மாணவர்களை இணைக்கும் நிகழ்வுகள் நடைபெறவிருந்த நிலையில் பாடசாலை பூட்டை உடைத்தெறிந்து விட்டு இனந்தெரியாத விசமிகள் வேறு பூட்டை போட்டுவிட்டுச்சென்றதால் மாணவர்களும் பெற்றோரும் பாடசாலையினுள் செல்லமுடியாது வெளியில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பிஞ்சு மாணவர்கள் நீண்ட நேரம் வெயிலில் தவித்ததை அவதானிக்க முடிந்தது. நேற்று வழமை போன்று பாடசாலையை மூடிவிட்டுச்சென்று இன்று காலை பாடசாலை திறக்க வந்தபோது…

Read More