Headlines

பனாமா பேப்பர்ஸ்: 65 இலங்கையர்கள் இவர்கள்தான் (முகவரியுடன் விபரம் இணைப்பு)

சர்சைக்குள்ளான பனாமா ஆவணங்களின் மூலம் வெளியிடப்பட்டுள்ள கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடைய 65 இலங்கையர்களின் தகவல்கள் வெளியாகியுள்ளன. பனமாவின் மொசெக் பொன்சேக்கா நிறுவனத்தின் உதவியுடன் நிதி பதுக்களில் ஈடுபட்ட நபர்களின் பெயர்ப்பட்டியல் நேற்று இரவு புலனாய்வு ஊடகவியலாளர்களின் சர்வதேச அமைப்பினால் வெளியிடப்பட்டது. இதனடிப்படையில் இலங்கையின் மூன்று நிறுவனங்கள் ,இடைத்தரகர்கள் எனப்படும் 7 பேர் மற்றும் நாட்டின் 53 தனியார் முகவரிகள் அடங்கிய விபரங்கள் இதன் மூலமாக வெளியிடப்பட்டிருந்தன இதேவேளை இதனூடாக இந்தியாவில் ஆயிரத்து 46 பேர் மற்றும் 828…

Read More

பனாமா ஆவணம்: ஆராய விசேட குழு

வெளிநாட்டிலுள்ள இரகசியக் கணக்குகள், சொத்துகள் தொடர்பான விவரங்களில்  வெளியிட்டுள்ள பனாமா ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்கள் குறித்து சரியான உறுதிப்படுத்தல்கள் ஆராய்வதற்கு, அரசாங்கம் விசேட குழுவொன்றை நியமித்துள்ளது.

Read More

பனாமா ஆவணகக்கசிவு இலங்கையில் விசாரணை ஆரம்பம்

பனாமாவில் பண மோசடியுடன் தொடர்பு கொண்ட இலங்கையர்கள் குறித்த விசாரணைகளை மேற்கொள்ள அவற்றுக்குரிய திணைக்களங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க வொசிங்டனில் வைத்து தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அவர் அமெரிக்கா சென்ற நிதியமைச்சர் அங்கு சர்வதேச ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிட்ட போது, பனாமா மோசடிகளுடன் தொடர்புடைய இலங்கையர்கள் குறித்த விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று  குறிப்பிட்டுள்ளார். வரி சலுகையை பெற்றுக் கொள்வதில்…

Read More

பனாமா ஆவணக்கசிவில் இலங்கையர் தொடர்பு குறித்து விசாரணை

பனாமா நாட்டை தளமாக கொண்ட மொஸாக் ஃபொன்செக என்ற சட்ட நிறுவனத்தின் கசிந்துள்ள ஆவணங்களில் இலங்கையர்கள் தொடர்புபட்டுள்ளார்களா என்பது குறித்து அரசாங்கம் வெளிப்படையாக விசாரணைகளை முன்னெடுக்குமென அரச தொழில் முயற்சிகள் பிரதி அமைச்சர் எரான் விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சீஷெல்ஸ் நாட்டுடன் மிக நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்தமையால் இது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும், அரசாங்கம் என்ற வகையில் நாட்டின் சட்டங்கள், சர்வதேச சட்டங்கள், பணப்பரிமாற்றச் சட்டங்கள் என்பன மீறப்பட்டுள்ளனவா என்பது குறித்து…

Read More

எனக்கு எதுவும் கூற முடியாது

– வி.நிரோஷினி – பனாமா இரகசிய வங்கிக் கணக்குகள் தொடர்பில் என்னால் எதுவும் கூற முடியாது. அது தொடர்பில் நாடாளுமன்றத்திலேயே கூடி பேசி தீர்மானிக்க முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்தில்  இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். உலகில் இரசிய வங்கிக்கணக்குகள் உள்ள நாடுகளில் இலங்கையும் அடங்குவதாக ஐரிஸ் டைம்ஸ் பத்திரிகை…

Read More