தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!
உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தருமாறு கோரி பதுளை, அம்பாறை உயர் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தருமாறு கோரி பதுளை, அம்பாறை உயர் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இணக்க சபைகளில் நிலவும் வெற்றிடங்களை விரைவில் நிரப்புவதற்கு நீதி அமைச்சு திட்டமிட்டுள்ளது. அதற்கமைய, 13 மாவட்டங்களில் இணக்க சபைகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்பப்படவுள்ளன. இதன்படி கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மன்னார், பதுளை, கண்டி, கம்பஹா, குருநாகல், ஹம்பாந்தோட்டை, காலி, மொனராகலை, கேகாலை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளதுடன் இணக்க சபைகளை வலுவூட்டுவதன் ஊடாக பிரதேச மட்டத்தில் நிலவும் சில பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும் என நீதி…
இலங்கையில் ஊவா மாகாணம் பதுளை மாவட்டத்திலுள்ள வெலிமடை பகுதியில் முஸ்லிம் ஆரம்ப பாடசாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கு உள்ளூர் பௌத்த அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த எதிர்ப்பு காரணமாக நேற்று வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த புதிய பாடசாலைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இறுதி நேரத்தில் கைவிடப்பட்டது. தற்போது வெலிமடை பிரதேச முஸ்லிம் மாணவர்கள் ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை வெலிமட முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று வருகின்றனர். இப்பாடசாலையில் ஏற்பட்டுள்ள இட நெருக்கடி மற்றும் பாடசாலை…
மண்சரிவு அபாயமுள்ள மாவட்டங்களாக 7 மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் கேகாலை, இரத்தினபுரி, பதுளை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகள், கடும் ஆபத்தான நிலைமையில் உள்ளன என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. மலைகள் கொண்ட பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்கள், இயற்கைக்கு மாறாக நிலத்தில் வெடிப்புகள் மற்றும் நீரோட்டங்கள் ஏற்படுவதைக் கண்டால், அவை தொடர்பில் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டிய அதேவேளை, அது தொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறு, மேற்படி நிறுவனத்தின் மண்சரிவு தொடர்பான ஆராய்ச்சிக்குழுவின் பணிப்பாளர்…
பதுளை, மடுல்சின்ன கல்வுல்ல மெட்டிகாத்தன்னை பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (10) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 49 வயதான இரு பிள்ளைகளின் தாய் ஒருவரே உயிரிழந்துள்ளார். கணவனும் மனைவியும் வீட்டில் இருந்த போது மின்னல் தாக்குதலுக்கு இழக்காகி மனைவி இறந்துள்ளதாகவும் கணவனுக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, நாட்டில் சீரற்ற காலநிலை நிலவுவதால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்புடன்…
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி மதுபான போத்தல்களை ஏற்றிச் சென்ற கண்டெய்னர், பதுளை போகாமடித்தை என்ற இடத்தில் நடுவீதியில் திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ் விபத்தில் சாரதியும் நடத்துனரும் மட்டுமே பயணித்தனர். இருவரும் காயங்களுக்குள்ளாகிய போதிலும் சாரதி ஆபத்தான நிலையில் பதுளை அரசினர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பதுளை பொலிசார் விபத்து குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
சிங்க லே அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகன ஊர்வலம் மற்றும் கூட்டம் என்பனவற்றுக்கு நீதிமன்றத்தில் பொலிஸார் இடைக்காலத் தடை உத்தரவொன்றைப் பெற்றுள்ளனர். இந்த தடை உத்தரவை பதுளை நீதிமன்ற மேலதிக நீதவான் ஆர்.எம்.பி.சீ. ரத்நாயக்க பிறப்பித்துள்ளார். பண்டாரவளையிலிருந்து பதுளை நோக்கி வாகனப் பேரணியில் வந்து நேற்று (7) மாலை முதியங்கன ரஜமகா விகாரையில் கூட்டமொன்றை நடாத்த சிங்க லே அமைப்பு தயாராகி வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை வைத்து பொலிஸார் தடை உத்தரவைப் பெற்றுள்ளதாகவும்…
கம்பஹா ரயில் கடவையில், கடமையில் ஈடுபட்டிருந்த ஊழியர் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார். நேற்று மாலை பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் பெம்முல்ல ரயில் பாதையின் மேற்பார்வை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பெம்முல்ல ரயில் கடவையில் காவலாளியாக கடமையாற்றிய அத்தனகல்ல பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய நபரே ரயில் மோதுண்டு உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது