Headlines

கொழும்பு பங்குச் சந்தையில் திடீர் மாற்றம்

இலங்கையில் பங்குப் பரிவர்த்தனைக்கென அமைந்துள்ள கொழும்பு பங்குச் சந்தையில் பங்குகளின் விலை திடீரென நேற்று (27) உயர்வடைந்துள்ளது. தற்போது சகல விலைச்சுட்டெண்ணும் 6571.21 ஆக காணப்படுகிறது. நாளின் இறுதியில் 15.2 மில்லியன் பங்குகள் கைமாற்றப்பட்டுள்ளன. மேலும் மொத்த பணப்புரள்வு 1084.9 மில்லியனாகும்.

Read More

கொழும்பு பங்குச் சந்தை 17 நிமிடங்களுக்கு ஸ்தம்பிதம்

கொழும்பு பங்குச் சந்தை 17 நிமிடங்களுக்கு ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. மின்சாரத் தடை காரணமாக நேற்று 17 நிமிடங்களுக்கு கொழும்பு பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக ஸ்தம்பிதம் அடைந்திருந்தது. இதன்படி, நேற்று (16) காலை 9.58 முதல் 10.15 மணி வரையில் 17 நிமிடங்கள் பங்குச் சந்தை நடவடிக்கைகள் தற்காலிகமாக ஸ்தம்பிதமடைந்திருந்தது. இந்த 17 நிமிடங்களைத் தவிர்ந்த ஏனைய நேரங்களில் எவ்வித தடையும் இன்றி பங்குச் சந்தை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Read More

மின்தடையால் பங்குச் சந்தை நடவடிக்கைகள் பாதிப்பு

கொழும்பு பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பங்குப்பரிவர்த்தனை நிலையம் அறிவித்துள்ளது. மின்சார விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடை காரணமாகவே பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பங்குப்பரிவர்த்தனை நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Read More