Headlines

நான்கு வகையான அனர்த்தங்கள் தொடர்பில் எச்சரிக்கை

நாட்டில் தற்போது நிலவிக்கொண்டிருக்கின்ற மோசமான வானிலை தொடர்ந்து நீடிக்குமாயின், ஐந்து மாவட்டங்களில் உள்ள 26 பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில், நான்கு வகையான அனர்த்தங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் எதிர்வு கூறியுள்ளது. கண்டி, இரத்தினபுரி, நுவரெலியா, கேகாலை, களுத்துறை ஆகிய மாவட்டங்களிலேயே, இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்படுவதற்கான சாத்தியகூறுகள் தென்படுகின்றன. மண்சரிவு, பாறை விழுகை, நில தாழிறக்கம், நிலவெட்டு சாய்வுகள் இடிந்து விழும் சாத்தியங்கள் தொடர்பிலேயே அவதானமாக இருக்குமாறு அந்நிலையம் தெரிவித்துள்ளது.

Read More

உயிருடன் பிடிக்கப்பட்ட சிறுத்தைக் குட்டி உயிரிழப்பு!

– க.கிஷாந்தன் – அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல் தோட்டத்திலுள்ள தேயிலை மலையிலிருந்து நேற்று (10) உயிருடன் மீட்கப்பட்டு நுவரெலியா மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்ட சிறுத்தைக் குட்டியொன்று உயிரிழந்துள்ளதாக நுவரெலியா மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். நேற்று காலை தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள், சிறுத்தைக் குட்டியொன்று தேயிலைச் செடிக்குள் பதுங்கி இருப்பதைக் கண்டு உயிருடன் பிடித்துள்ளனர். நுவரெலியா மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த சிறுத்தை குட்டியை…

Read More

நுவரெலியாவில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை

வசந்த காலத்தையொட்டி நுவரெலியா நகரில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு, விசேட போக்குவரத்து நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் நகரம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த சுவரொட்டியில், அவசர நேரங்களில் நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியையும், பொலிஸாரையும் 052-2222226, 052-2222223, 052-2222444, 052-2222225, 072-6534317 ஆகிய இலக்கங்களில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வசந்தகால நிகழ்வுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் இதற்காக உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் இந்த விசேட பாதுகாப்பு…

Read More

மலேரியா நோய் தொடர்பில் துரித நடவடிக்கை

மலேரியா நோயால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் நேற்றைய தினம் (11) நுவரெலியாவில்அடையாளங் காணப்பட்டதைத் தொடர்ந்து இந்த நோய் தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகள் தொடர்பாக விசேட மருத்துவப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக மலேரியா ஒழிப்பு பிரிவின் வைத்தியர் எச்.டபிள்யூ.பீ.ஹேரத் தெரிவித்துள்ளார். அத்துடன், நேற்றைய தினம் நுவரெலியாவில் அடையாளம் காணப்பட்ட இந்தியப் பிரஜையான மலேரியா நோயாளியுடன் சேர்த்து இதுவரை இலங்கையில் 16 மலேரியா நோயாளிகள்அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கைக்குள்…

Read More

மலேரியாவை பரப்ப இந்தியா சதி : மருத்துவ அதிகாரிகள் குற்றச்சாட்டு

இலங்கையில் சுமார் 40 வருடங்களாக மலேரியா நோய் காணப்படவில்லை. ஆனால் தற்போது நுவரெலியாவில் இந்தியர் ஒருவர் மலேரியா நோயுடன் இனம்காணப்பட்டுள்ளார். மலேரியா நோய் இல்லாத நாடாக காணப்பட்ட இலங்கையில் மலேரியாவை பரப்புவதற்கு இந்தியா சதித் திட்டம் செய்துள்ளது என இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

Read More

குதிரை பந்தய திடலில் ஆர்ப்பாட்டம்

நுவரெலியா குதிரை பந்தய திடலில் பராமரிப்பை நடைமுறையில் உள்ள தனியார் கம்பனியிடம் இருந்து இதற்கு முன்னர் பராமரிப்பை மேற்கொண்ட குறித்த ஒரு நிறுவனத்தின் மேற்பார்வைக்கு ஒப்படைப்பதை எதிர்த்து இன்று 200ற்கும் மேற்பட்ட குதிரை பந்தய திடல் சேவையாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இவ் ஆர்ப்பாட்டம் நுவரெலியா குதிரை பந்தய திடலின் அருகில் உள்ள மத்திய வங்கி கட்டிடத்திற்கு முன்னால் இடம்பெற்றது. இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தற்பொழுது நடைமுறையில் உள்ள ரோயல் தனியார் நிறுவனத்தின் கீழ் நிர்வகிக்க…

Read More

ஆசிரிய இடமாற்றத்தின்போது தேசிய கொள்கை பின்பற்றப்படுவதில்லை

– க.கிஷாந்தன் – இலங்கையில் தேசிய இடமாற்றக்கொள்கை இருந்தும் நுவரெலியா – வலப்பனை கல்வி வலயத்தில் 2012ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்த கொள்கை பின்பற்றப்படுவதில்லை என அகில இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட செயலாளர் ஆசிரியர் வே.இந்திரசெல்வன் தெரிவிக்கின்றார். பின்தங்கிய இடங்களில் கடமையாற்றுகின்ற ஆசிரியர்கள் 10 வருடங்களுக்கு மேல் ஒரே பாடசாலையில் சேவையாற்றி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு சிலர் 20 வருடங்களுக்கும் மேலாக வசதியான பாடசாலைகளிலே கடமையாற்றுவதால், பல ஆசிரியர்கள் உள ரீதியாக பாதிப்புக்குள்ளாவதோடு,…

Read More